Saturday, October 24, 2009
தங்கத்தை குறிவைக்கும் அமெரிக்க திருடர்கள்
வாஷிங்டன்DC:பொருளாதார மந்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது. .இதனால் அமெரிக்காவில் கொள்ளையடிக்கும் திருடர்கள், இந்தியர்கள் மற்றும் தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் வீடுகளைக் குறி வைத்து திருடுகின்றனர்
தற்போது, அமெரிக்காவில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும், இந்தியர்கள் மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மட்டும் குறி வைக்கப்படுகின்றன. வாஷிங்டன் புறநகர்ப் பகுதியான பேர்பாக்ஸ், லவுடன் பகுதிகளில் வசிக்கும் வசதியுள்ள இந்தியர்கள்தான் இவர்களின் இலக்கு. இன்றைய பொருளாதார மந்தத்தில் கூட தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.இந்தியர்களின் வீடுகளில் பாரம்பரியமாக தங்கநகைகள் சேர்த்து வைக்கும் வழக்கம் இருப்பதை அறிந்துள்ள அவர்கள்.எனவே இந்த வீடுகளைக் கொள்ளையடிப்பதற்குத் தேர்ந்தெடுக்கின்றனர். நேரடியாக மார்க்கெட்டில் விற்பதற்கு ஏதுவாக 22 கேரட் தங்கக் கட்டிகள், புடவைகளிலுள்ள தங்க இழைகள் இவற்றை மட்டும் கொள்ளையடிப்பர். பகலில் மட்டும் நடக்கும் இந்தக் கொள்ளையில் வெள்ளி மற்றும் நேர்த்தியாக செய்யப்பட்ட தங்க நகைகளைத் திருடமாட்டார்கள்.
ஹூஸ்டனில் 93, மத்திய இல்லினாய்சில் 37 இடங்களிலும், சென்ட் பால் பகுதி, மின்னசோட்டா பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு திருட்டுகள் நடந்துள்ளன. இந்த திருட்டுகளில் எதிலும் சரிவர துப்பு துலங்கவில்லை.சமீபத்தில் வாஷிங்டன் புறநகர்ப் பகுதிகளான லவுடனின் தென்பகுதியில் மூன்று திருட்டுச் சம்பவங்களும், பேர்பாக்ஸ் பகுதியில் 6திருட்டுகளும்,கடந்த ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் வரை ரெஸ்டன், சென்டர் வில்லே மற்றும் பேர்ஓக்ஸ் பகுதிகளில் 16 திருட்டுகளும் நடந்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment