
ரவிமரியா இயக்கும் "மிளகா' படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ""யதார்த்தமான கதையுடன் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆவல்தான் இந்த "மிளகா' படம். "சுப்பிரமணியபுரம்', "நாடோடிகள்' பட வரிசையில் இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும். இந்திப்பட ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே "நாளை' படத்தில் நடித்தவர். நாயகியாக "மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் நடித்த பூங்கொடி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சுஜா நடிக்கிறார். ஒவ்வொரு கேரக்டர் ரோலும் நிச்சயமாக பேசப்படும். ஆக்ஷனும் காமெடியும் கலந்த மதுரை மண்ணின் மற்றொரு பக்கத்தை சொல்லும் படமாக மிளகா இருக்கும்'' என்றார் இயக்குநர் ரவிமரியா.
இன்னும் எத்தனை வருஷம் மண்ணு கதை மண்ணு கதைனு கதை விடுவீங்க ? தமிழனை பார்த்த இளிச்ச வாயனா தெரியுதா ?
- நக்கல் நாகராசன்
No comments:
Post a Comment