Pages

Monday, October 26, 2009

திருத்துறைப்பூண்டி கோயிலில் திருடுபோன ரூ.50 கோடி மரகத லிங்கம் மீட்பு


திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கோயிலில் திருடப்பட்ட ரூ.50 கோடி மதிப்புள்ள அபூர்வ மரகத லிங்கம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.திருவாரூர், வேதாரண்யம், திருக்குவளை, நாகப்பட்டினம், உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள "சப்தவிடங்கள்', 27 இடங்களில் உள்ள உபவிடங்கள் எனப்படும் சிவன் கோயில்களில் பச்சை நிறமுள்ள மரகத கல்லால் ஆன லிங்கங்கள் பல ஆண்டுகளாக பூஜிக்கப்படுகின்றன.
விலை மதிப்பு செய்ய முடியாத இந்த லிங்கங்களைத் திருடுவதில் ஒரு கும்பல் ஈடுபட்டது.

இதுவரை 3 மரகத லிங்கம் திருட்டு: இதில் நாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீநீலதாட்சி அம்மன் கோயில், திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் உள்ள ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் ஆகியவற்றில் இருந்த 2 மரகத லிங்கங்கள் 1992-ல் திருடுபோயின. இது குறித்து போலீஸôரின் விசாரணையில் இதுவரை துப்பு துலங்கவில்லை.
இந் நிலையில் திருவாரூர் அருகே உள்ள திருத்துறைப்பூண்டியில் உள்ள ஸ்ரீ பிறவி மருந்தீசுவரர் கோயிலில் மிகவும் அரிதான மரகத லிங்கத்தை கடந்த பிப்ரவரி 19-ம் தேதி ஒரு கும்பல் திருடியது.

இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய, பொருளாதார குற்றப் பிரிவு ஏடிஜிபி ஜி.திலகவதி உத்தரவின் பேரில் ஐஜி செ.ராஜேந்திரன், டிஎஸ்பி எஸ்.செல்வராஜ், இன்ஸ்பெக்டர் காதர் பாட்சா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இந்நிலையில் மரகத லிங்கத்தை சென்னைக்கு கடத்தி, இக் கும்பல் விற்க வர உள்ளதாகவும் போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.

சென்னைக்கு கடத்தி விற்க முயற்சி.. இதையடுத்து மாறுவேடத்தில் தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறிய பட்டுக்கோட்டை ஆ.ரமேஷ் (30), வலங்கைமான் பி.செந்தில் (29) ஆகியோரை போலீஸôர் கைது செய்தனர்.போலீஸôர் நடத்திய சோதனையில், ரமேஷ் வைத்திருந்த பையில் இருந்து மரகத லிங்கத்தை போலீஸôர் கைப்பற்றினர். இது திருத்துறைப்பூண்டி கோயிலில் திருடப்பட்டது என்பது தெரியவந்தது.

No comments:

Post a Comment