Pages

Tuesday, October 27, 2009

70,000 போலி டாக்டர்கள்

பாகிஸ்தான் நாட்டில் 70,000 போலி டாக்டர்கள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மருத்துவப் பட்டப்படிப்பு படிக்காமலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருகிறார்கள். விசாலமான இடவசதி இல்லாமலும், தரமான மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தாமலும் சிகிச்சையளிப்பதாக புகார் எழுந்துள்ளது.ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனையில் 6 போலி டாக்டர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களில் 3 பேர் சகோதரர்கள் எனவும் சமீபத்தில் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகார் வந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த டாக்டர்கள் பாகிஸ்தான் மருத்துவ மற்றும் பல்மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யவில்லையெனவும், போலியான பதிவுச் சான்றிதழ்களை வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் சுகாதாரத் துறையில் பலர் போலியாகவும், முறைகேடாகவும் செயல்பட்டு வருகிறார்கள். ஏராளமான மக்கள் போலிகளிடம் சென்று சிகிச்சை பெறுகிறார்கள். பைசலாபாத்தில் மட்டும் 20 போலி டாக்டர்கள், மருத்துவமனைகளை நடத்தி வருவதாக, எய்ட்ஸ் நோய் குறித்த சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற அஸ்லம் அக்தர் தெரிவித்தார். போலி மருத்துவர்களில் 99 சதவீதம் பேர் பட்டப்படிப்பு படிக்காதவர்கள். 76 சதவீதம் பேர் சிகிச்சையின்போது மருத்துவ முறைகளை சரியாகப் பயன்படுத்துவதில்லை. மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதில்லை என்றார்.

இந்நிலையைப் போக்க நாட்டில் மருத்துவத் துறைகளில் போலியாகச் செயல்படுபவர்கள் மீது சுகாதாரத் துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தேவையான வழிமுறையை உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் மிர் அஜீஸ் உசைன் ஜக்ரானி கூறும் போது, மருத்துவத்தில் முறைகேடு செய்பவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

இஸ்லாமாபாத், அக். 26: பாகிஸ்தான் நாட்டில் 70,000 போலி டாக்டர்கள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவப் பட்டப்படிப்பு படிக்காமலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருகிறார்கள். விசாலமான இடவசதி இல்லாமலும், தரமான மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தாமலும் சிகிச்சையளிப்பதாக புகார் எழுந்துள்ளது.

ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனையில் 6 போலி டாக்டர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களில் 3 பேர் சகோதரர்கள் எனவும் சமீபத்தில் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகார் வந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த டாக்டர்கள் பாகிஸ்தான் மருத்துவ மற்றும் பல்மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யவில்லையெனவும், போலியான பதிவுச் சான்றிதழ்களை வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் சுகாதாரத் துறையில் பலர் போலியாகவும், முறைகேடாகவும் செயல்பட்டு வருகிறார்கள். ஏராளமான மக்கள் போலிகளிடம் சென்று சிகிச்சை பெறுகிறார்கள். பைசலாபாத்தில் மட்டும் 20 போலி டாக்டர்கள், மருத்துவமனைகளை நடத்தி வருவதாக, எய்ட்ஸ் நோய் குறித்த சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற அஸ்லம் அக்தர் தெரிவித்தார்.

போலி மருத்துவர்களில் 99 சதவீதம் பேர் பட்டப்படிப்பு படிக்காதவர்கள். 76 சதவீதம் பேர் சிகிச்சையின்போது மருத்துவ முறைகளை சரியாகப் பயன்படுத்துவதில்லை. மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதில்லை என்றார்.

இந்நிலையைப் போக்க நாட்டில் மருத்துவத் துறைகளில் போலியாகச் செயல்படுபவர்கள் மீது சுகாதாரத் துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தேவையான வழிமுறையை உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் மிர் அஜீஸ் உசைன் ஜக்ரானி கூறும் போது, மருத்துவத்தில் முறைகேடு செய்பவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment