

இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்பட்டு வருவதாக அதிபர் ராஜபட்ச பொய்யானத் தகவல்களைக் கூறிவருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் தா.பாண்டியன் குற்றஞ்சாட்டினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் மேலும் கூறியது:இலங்கையில் தமிழர்கள் ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு மாற்றப்படுகின்றரே தவிர அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை.பொய்யான தகவல்களைக் கூறிவரும் ராஜபட்ச மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தவேண்டும்.
தமிழக எம்.பி.க்கள் குழு அங்குள்ள முகாம்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இலங்கை அரசு, மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி, தமிழக முதல்வரின் கலைஞர் டி.வி. மற்றும் ஊடகங்களை ஏன் அனுமதிக்கவில்லை?இலங்கை சென்று திரும்பிய தொல்.திருமாவளவன் மட்டும் அங்கு மக்கள் அவதிப்படுவதை தெரிவித்து வருகிறார். மற்ற எம்.பி.க்கள் எல்லாம் ஏதோ பயணத்தில் வெற்றி பெற்றுவிட்டதாகப் பேசிவருகின்றனர். நவ.17-ல் மறியல்: விலை வாசி உயர்வுக் கண்டித்து தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் நவ.17-ம் தேதி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment