
சுப்பிரமணியபுரம் நாயகி சுவாதிக்கு ஆந்திர மாநில அரசின் சிறந்த நடிகைக்கான நந்தி விருது கிடைத்துள்ளது. தெலுங்கில் வெளியான அஷ்ட செம்மா படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தெலுங்குப் படக் கலைஞர்களுக்கு நந்தி விருதுகளை வழங்கி ஆந்திர அரசு கவுரவித்து வருகிறது. தற்போது 2008ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அஷ்டசெம்மா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சுவாதிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. அதேபோல ரவி தேஜா சிறந்த நடிகராகவும், சிறந்த படமாக கம்யமும் தேர்வாகியுள்ளன. அனுஷ்கா நடித்த அருந்ததீ படத்துக்கு 10 விருதுகள் கிடைத்துள்ளன.
No comments:
Post a Comment