Pages

Thursday, October 29, 2009

வன்முறை பரவி வருவதற்கு தமிழ்ப் படங்களே காரணம்

இந்திய சமூகத்திடம் வன்முறை பரவி வருவதற்கு தமிழ்ப் படங்களே காரணம் என்று மலேசியாவின் இஸ்லாமிய பாஸ் கட்சி கூறுகிறது.
இதுபற்றிப் பேசிய பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் நஸ்ருதின் ஹசான் தன்தாவி இத்தகைய படங்கள் திரையிடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
இந்திய இளையர்களிடையே காணப் படும் வன்முறை நீண்டகாலமாக
வன்முறைச் சம்பவங்களைக் கொண்ட படங்களை தொலைக்காட்சிகளில் காட்டிய தன் விளைவு என்று அவர் கூறியதாக தி நியூபேப்பர் செய்தி தெரிவித்தது.
“இந்திய இளையர்கள் பிரச்சினை களைத் தீர்க்கப் பயன்படுத்தும் ஆயுதங் களைக் கவனித்தாலே அவை தமிழ்ப் படங்களில் வருவதைப் போலவே இருப்பதை உணரலாம். இந்திய இளையர்கள் நமது சகோதரர்கள் போன்றவர்கள், அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொல்வதை நாம் அனுமதிக்கக்கூடாது,” என்றார் அவர்.







-தகவல் உதவி துருவன் மாரியப்பா , மலேசியா

1 comment:

  1. சத்தியமான உண்மை . மலேசியா மந்திரி சொன்னது தப்பே இல்லை . இங்கே இல்லையா சமுதாயம் கஞ்ச சாராயம் வன்முறை இப்படி போகுதுன்னா காரணம் நூறு சதம் சினிமாதான் , இது கதிர் காம முருகன் மேல சத்தியம் .

    ReplyDelete