திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, "கல்யாணமஸ்து' இலவச திருமணத் திட்டத்தில், நேற்று முன்தினம், ஆந்திராவில் 8,087 தம்பதிகள், திருமணம் செய்து கொண்டனர். ஆந்திராவில், 19 மாவட்டங்களில், நேற்று முன்தினம், "கல்யாணமஸ்து' திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
ஐதராபாத்தில் உள்ள லலித கலா தோரணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், மாநில கவர்னர் என்.டி.திவாரி, முதல்வர் ரோசய்யா, தேவஸ்தான போர்டின் தலைவர் ஆதிகேசவலு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். இத்திருமணத்தில் பங்கேற்ற 209 தம்பதிகளில், லண்டன் நகரைச் சேர்ந்த அரியட்டு, ஐதாராபத்தைச் சேர்ந்த கிராந்தி சைதன்யா தம்பதியினரும் குறிப்பிடத்தக்கவர்கள். முதல்வர் ரோசய்யா பேசுகையில், "திருப்பதி தேவஸ்தானம் செயல்படுத்தி வரும், இலவச கல்யாணமஸ்து திருமண திட்டத்தில், இதுவரை ஐந்து தவணைகளில், மாநில அளவில் 34,520 தம்பதிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பத்ராசலம் கோவிலில், 878 தம்பதிகள் திருமணம் செய்துள்ளனர். புதுமண தம்பதிகள் நலமுடன் வாழ ஆசீர்வதிக்கிறேன்' என்றார். மாநில கவர்னர் திவாரி பேசுகையில், "ஒரே சுப முகூர்த்த நேரத்தில், ஆயிரக்கணக்கான தம்பதிகள், திருமணம் செய்து கொள்வது சுபநிகழ்ச்சி. பணம் செலவில்லாமல், வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யும் இத்திட்டம், இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது' என்றார். சத்யசாய் நிகமாகம் வளாகத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில், கண்பார்வையற்ற இருவரும், சித்தூர் மாவட்டத்தில், 14 மையங்களில், 274 தம்பதியரும் திருமணம் செய்து கொண்டனர். திருப்பதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சேஷாத்ரி கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
Friday, October 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment