மலேசிய முதலாளிகளால் கடுமையாக அடிக்கப்பட்டு, இரண்டு நாட்கள் வரையில் கழிவறையில் கட்டப்பட்டு பூட்டி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இந்தோனீசியப் பணிப்பெண் மரணம் அடைந்ததாக மலேசியப் போலிசார் தெரிவித்துள்ளனர்.
சுரபாயாவைச் சேர்ந்த 36 வயதான மவ்டிக் ஹானி துன்புறுத்தப்பட்டது தொடர்பில் மலேசிய விற்பனையாளர் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மைய காலமாக வீட்டுப் பணிப்பெண்கள் தும்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்தோனீசியா, வீட்டுப் பணிப் பெண்களை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.
வீட்டுப் பணிபெண்கள் தவறாக நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நிபந்தனைகளையும் அவர்களுடைய சம்பளங்களையும் உள்ளடக்கிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்வது பற்றி மலேசியாவும் இந்தோனீசியாவும் பேச்சு நடத்தி வருகின்றன.
“மவ்டிக் ஹானி மருத்துவமனையில் இறந்ததை என்னால் உறுதி செய்ய முடியும்,” என்று மாவட்ட போலிஸ் தலைவர் முகம்மது மாட் யூசோப் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஹானி ஒரு வாரத்திற்கு முன்பு அவருடைய முதலாளியின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டார்.

No comments:
Post a Comment