Friday, October 23, 2009
போலிஸ்காரரை பல்லால் கடித்த எம்.பி
கோலாலம்பூர் மலேசியாவில் ஒரு போலிஸ்காரரைப் பல்லால் கடித்து அவரது கடமையைச் செய்யவிடாமல் தடுத்த எதிர்க்கட்சித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவுக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று 6 மாதச் சிறைத்தண்டனையும் 3,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
கெஅடிலான் கட்சியைச் சேர்நத சுவா 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அக்குற்றத்தைச் செய்ததாகக் கூறப்பட்டது. தண்டனைக்கு எதிராக சுவா மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து தண்டனை நிறைவேற்றப்படுவதை மாஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி நிறுத்தி வைத்ததாக நீதிமன்றத் தகவல்கள் கூறின. மேல்முறையீட்டில் அத்தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுமானால் சுவா, எம்பி பதவியை இழக்க நேரும். முன்னதாக நீதிபதி தமது தீர்ப்பில் சுவாவின் சாட்சியம் வெறும் மறுப்புரையாகத்தான் இருந்தது என்று குறிப்பிட்டார். “எதிர்த்தரப்பு தாக்கல் செய்த வீடியோ ஒளிப்பதிவில்கூட, சுவா கைது செய்யப்படுவதற்கு மறுப்புக்காட்டுவதைத்தான் பார்க்க முடிந்தது,” என்று நீதிபதி முகம்மது பைசி ஷி அபு கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment