Pages

Sunday, October 25, 2009

அவதூறு வழக்கில் வருத்தமும், மன்னிப்பும்


சினிமாக்களில் அவதூறு மற்றும் ஆபாச காட்சிகள் இடம்பெறுவதை தடுக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று சிவகாசி பட விவகாரத்தில் நடிகர் விஜய் உள்ளிட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட் நிதிபதி கூறியுள்ளார்.

சிவகாசி படத்தில் இடம்பெற்ற வக்கீல்களை இழிவு படுத்தும் காட்சிகள் இடம் பெற்றதாக கூறி நடிகர் விஜய், படத்தின் இயக்குனர் பேரரசு, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோர் மீது கடந்த 2005ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யும்படி சிவகாசி படக்குழு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரகுபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், சினிமா, டி.வி.க்களில் ஒளிபரப்பாகும் காட்சிகளில் அவதூறு, சித்தரிக்கப்பட்ட, ஆபாச காட்சிகள் இடம் பெறுவதைத் தடுக்க முறையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இப்போதுள்ள சினிமாடோகிராப் சட்டம் மற்றும் கேபிள் டி.வி., (ஒழுங்குப்படுத்தும்) சட்டம் 1995-ல் முறையான திருத்தம் கொண்டு வர வேண்டும். திரையரங்குகள், உள்ளூர் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் எவ்வித கண்காணிப்பு இல்லாமல் ஒளிபரப்பாகின்றன. சமூகம் மாசுபடுவதை தடுக்க மாநில அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவதூறு வழக்கில் வருத்தமும், மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருப்பதால் நடிகர் விஜய், இயக்குநர் பேரரசு, ஏ.எம்.ரத்னம் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன, என்று கூறினார்.

2 comments:

  1. why In India particullarly the judgement comes in favour of cine people.Not the petioner.We are really wondering ?

    Mrithula , United states

    ReplyDelete
  2. Why you give so much importance to cinema ? But this is the right time to tighten the censor and pass bill for tv and cable.

    ReplyDelete