Thursday, October 15, 2009
"காந்திய அறவழியில், இலங்கை மக்கள் எல்லோரும் சம உரிமையுடன் வாழும் நிலை
இலங்கைத் தமிழர்களை விரைவில் குடியமர்த்துவோம்
இலங்கையில் அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர்களை அவர்களின் சொந்தப்பகுதிகளில் மீண்டும் குடியமர்த்துவதே தமது முன்னுரிமை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியிருக்கிறார். ஆனால் அங்கு விடுதலைப் புலிகள் பதுக்கி வைத்திருக்கும் கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே இது சாத்தியம் என்று தம்மைச் சந்தித்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் களிடம் அவர் தெரிவித்தார். அத்துடன் இலங்கையில் உள்ள இனப்பிரச்சினைக்கான எவ்விதத் தீர்வும் அனைத்துத் தரப்பு மக்களையும் திருப்தி செய்யும் வகையில் அமைய வேண்டும் என்று 10 நாடாளு மன்ற உறுப்பினர்களிடமும் அவர் தெரிவித்ததாக ‘எக்ஸ் பிரஸ் பஸ்’ செய்தி குறிப்பிட்டது. அதேவேளையில் இந்தத் தீர்வானது தமது அண்டை நாடான இந்தியாவுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். இப்பிரச்சினையில் இலங்கைத் தமிழர்களில் 65 விழுக்காட்டினர் கொழும்பில் தங்கியிருப்பதை இலங்கை அதிபர் சுட்டிக் காட்டினார். இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட அதிபரின் சகோதரர், ஆலோசகர் மற்றும் அகதிகளைக் குடியமர்த்தும் நடவடிக்கைக் குழுவின் தலைவருமான பாசில் ராஜபக்சே, இரண்டு நாட்களில் அகதிகள் தங்கியிருக்கும் முகாம்களில் நெரிசலைக் குறைக்கும் நடவடிக்ககைள் எடுக்கப்படும் என்று சொன்னார். அந்த முகாம்களிலிருந்து கூடுதலான அகதிகள் வெளியேற்றப்படுவர் என்றார் திரு பாசில். முன்னதாக தமிழ் அகதி களைக் மறு குடியமர்த்தும் பணி மெதுவாக நடைபெறுவது தங்களுக்கு கவலை அளிப்பதாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். இதற்கிடையே, இலங்கைக்குச் சென்றுள்ள தமிழக நாடாளு மன்றக் குழு உறுப்பினர்கள் இந்த வருகைக்குப் பின் தங்கள் மனோபாவத்தில் ஒரு ஆக்க பூர்வமான மாற்றம் ஏற்பட்டு உள்ளதாகக் கூறியதாக மற்றொரு செய்தித் தகவல் தெரிவித்தது. இந்தச் சந்திப்பு நட்பார்ந்த முறையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் திருமா வளவனைக் காட்டி, கனி மொழியிடம் பேசிய ராஜபக்சே, இவர் (திருமாவளவன்) பிரபா கரனின் நெருங்கிய நண்பர். நல்ல நேரம் பிரபாகரனின் கடைசிக்காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் தப்பி விட்டார். இல்லையென்றால் இவரும் தொலைந்து போயிருப்பார் என்று கூற திருமாவளவன் அமைதியாக சிரித்தபடி இருந்தாராம் என்று தட்ஸ் தமிழ் குறிப் பிட்டது.
சென்னை :
"காந்திய அறவழியில், இலங்கை மக்கள் எல்லோரும் சம உரிமையுடன் வாழும் நிலை பிறக்கும்' என, முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:
இலங்கையில் தமிழர்கள் உரிமைக்காக செல்வா உயர்த்திய கொடி தாழ்ந்தது ஏன்? அது மீண்டும் பறக்குமா?
"ஈழம்' என்ற எக்காள முழக் கம், சதியினால் தூண்டி விடப் பட்ட சகோதர யுத்தங்களாக மாறி, இறுதியில் ஈன கானமாக ஒலித்து, இன்று நமது கவலைக் குக் காரணமாயிற்று. அக்கொடி கட்டாயம் மீண்டும் பறக்கும். காந்திய அறவழியில், இலங்கை மக்கள் எல்லாரும் சம உரிமையுடன் வாழும் நிலை பிறக்கும்.
இலங்கை சென்றுள்ள எம்.பி.,க்கள் குழு, உங்களைத் துதி பாடும் குழு என்றும், தமிழர்களை ஏமாற்றுவதற்கான திட்டம் என்றும், இந்த ஏமாற்று வேலையை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளாரே?
இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்பட எந்த முயற்சி எடுத்தாலும், அது அவருக்குப் பிடிக்காது. அங்கே பிரச்னை தொடர வேண்டும்; தமிழர்கள் அவதிப்பட வேண்டும்; அதை வைத்து இவர், மத்திய மாநில அரசுகளைக் குறை கூற வேண் டும் என்பதுதான் அவரது ஆசை.நம்மைப் பொறுத்தவரை, இலங்கைத் தமிழர் வாழ்வில் எப்படியாவது நிலையான ஒளி வீச வேண்டும்; அகதி முகாம்களில் உள்ளவர்கள் தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்ப வேண்டும்; நிம்மதியுடன் வாழ வேண்டும்.நமது எம்.பி.,க்கள் குழு, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவைச் சந்தித்து, தமிழர்கள் அவர்களுடைய வசிப்பிடங்களில் உடனடியாக குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு முன்னுரிமை அளிக் கப்படும்; இலங்கையில் உள்ள அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்; இந்தியாவும் அந்த அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ராஜபக்ஷே கூறியுள்ளார். நாமும் நம்மால் முடிந்த அளவிற்கு இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வுக்கான எல்லா ஏற்பாடுகளையும் ஆய்வு செய்து கொண்டு தான் வருகிறோம்.இலங்கைத் தமிழர்களிடம் நான் எந்த அளவிற்கு அக்கறை உள்ளவன் என்பதை தந்தை செல்வா, சந்திரஹாசன், அமிர்தலிங்கம், மங்கையர்கரசி, சேனாதி ராஜா, ஸ்ரீசபாரத்தினம், முகுந்தன், பத்மநாபா, பேபி என்ற சுப்பிரமணியம், ஆண் டன் பாலசிங்கம், தொண்டைமான் போன்றவர்கள் நன்கறிவர்.என் பொதுவாழ்வில், இலங்கைத் தமிழர்களுக்காக என்னென்ன நடவடிக்கையில் ஈடுபட்டேன் என்பதை, இலங்கைத் தமிழர்கள் நன்கு அறிவர்; ஜெயலலிதாவின் அறிக்கைகள் ஏமாற்றும் செயல் என்பதையும் அறிவர்.
மத்திய அமைச்சர் அழகிரி உஸ்பெகிஸ்தான் தூதருக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்காக அவர் பதவி விலக வேண்டுமென சுப்பிரமணியசாமி சொல்லியிருக்கிறாரே?
அது ஒன்றும் சிபாரிசுக் கடிதம் அல்ல. தமிழகத்தைச் சேர்ந்த இருவர் வெளிநாடு செல்லும் போது, தேவையான உதவிகளைச் செய்து தர, அந்த நாட்டில் உள்ள நமது தூதருக்கு கொடுக்கப்பட்ட ஒரு அறிமுகக் கடிதம்.அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டவர்கள், அந்த பயணமே மேற்கொள்ளவில்லை. அமைச்சர் அழகிரியின் அலுவலகத்தில் மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற செயல்பாடு அதிகமாக இருப்பதால், இது போன்ற கடிதங்கள் கொடுப்பது தவிர்க்க முடியாததாக ஆகியிருக்கலாம். இது ஒரு சாதாரண நடைமுறை என, வெளியுறவுத்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு 3,000 ஏக்கர் நிலம் கூட வழங்கப்படவில்லை என்று வரதராஜன் பேசியிருக்கிறாரே?
இதுவரை இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கர் நிலம் பண்படுத்தப்பட்டு, ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள் ளது. இந்த அரசைப் பார்த்து கேள்வி கேட்கும் வரதராஜன், சிறுதாவூரில் ஆக்கிரமிக்கப் பட்ட ஏழை விவசாயிகளின் நிலத்தை மீட்டுக் கொடுப்பேன் என முழக்கமிட்டதை மறந்து விட்டாரா? வேறு கட்சிகள் ஈடுபடட்டும் என விட்டு விட்டாரா?இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment