Thursday, October 15, 2009
மலேசியாவிற்கு பெண்ணை கடத்தி விற்பனை
மதுரை:
மலேசியாவிற்கு கடத்தப்பட்ட, திருமணமான பெண்ணை ஆஜர்படுத்தும்படி, திருப்புவனம் போலீசாருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த, அப்துல் கபூர் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு:என் மகள் பிரோடஸ் பானுவுக்கும்(33), சாகுல் அமீது என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சாகுல் அமீது மலேசியாவில் வேலை செய்து வருகிறார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள்.
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் மகள் என் வீட்டிற்கு வந்து விட்டார். பிப்., 23ல் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அலி ஜமால், என் மகளை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றார். தப்ப முயன்ற மகளை தாக்கினார். திருப்புவனம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. போலீஸ் விசாரணையில், என் மகள் மலேசியாவிற்கு கடத்தப்பட்டது தெரிய வந்தது. மகளை மீட்டு ஆஜர்படுத்த வேண்டும், என குறிப்பிட்டிருந்தது.
மனு, நீதிபதிகள் பி.முருகேசன், சி.எஸ்.கர்ணன் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜின்னா ஆஜரானார். அரசுத் தரப்பில், வக்கீல் சாமுவேல்ராஜ் ஆஜரானார். மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட பெண், போனில் பேசியதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு ஆஜர்படுத்தும்படி, போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment