Pages

Friday, October 16, 2009

பெண்களை அழைத்து வந்த 11 பேருக்கு சிறை தண்டனை


மஸ்கட் :

ஓமன் நாட்டில், ஆள் கடத்தலில் தொடர்புடைய 11 பேருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து, வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி: பகரைனில் இருந்து ஓமன் வந்த பெண்களை தவறாக பயன்படுத்த முயன்றதாக, ஓமன் மற்றும் சிரியாவை சேர்ந்த 13 பேர் மீது சந்தேகிக்கப்பட்டது. அவர்கள், போலியான திருமண சான்றிதழை பயன்படுத்தி, அந்த பெண்களை தங்கள் மனைவி என கூறி அழைத்து வந்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர், குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்; 11 பேருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக, போலீஸ் மற்றும் சுங்கத் துறை ஐ.ஜி., மாலிக் அல்-மாமரி தெரிவித்தார்.


ஓமன் மக்கள் தொகையில், கால் பங்கு வெளிநாட்டினர் . ஆள் கடத்தலை எதிர்த்து சமாளிக்க உதவும் வகையில், அங்கு இணைதளம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓமனில், கடந்த 2003ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஆள் கடத்தல் தடுப்பு சட்டத்தை கொண்டு வரப்பட்டது. இதன் படி, இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, 15 ஆண்டுகள் சிறை வரை தண்டனை மற்றும் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் அபராதம் ஆகியவை விதிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |

No comments:

Post a Comment