.jpg)
புதிய ஊடக எழுத்துகளுடன் எழுத்தாளர் விழா
Thu, 22/10/2009
திரைப்படம், நாடகம், இணையம் போன்ற பல்வேறு ஊடக எழுத்தாளர் களுடன் இந்த ஆண்டின் எழுத்தாளர் விழா கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 24ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை நடைபெறுaம் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் கிட்டத்தட்ட 111 எழுத்தாளர்களும் எழுத்துத் துறை சார்ந்த நிகழ்ச்சி நடத்துநர்களும் பங்கேற்கின்றனர்.
எழுச்சி பெற்று வரும் ஆசிய எழுத்துக்கு இந்த ஆண்டு விழா முக்கியத்துவம் கொடுக்கிறது.
நான்கு மொழிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ் நாட்டைச் சேர்ந்த கவிஞரும் பாடலாசிரியருமான த.பழமலய், எழுத்தாளர் அப்பள நரசய்யா, இலங்கையில் பிறந்து லண்டனில் வாழும் மாதுமை சிவசுப்ரமணியம் போன்ற வெளிநாட்டுத் தமிழ் எழுத்தாளர்களுடன் சிங்கப்பூரிய் பிரபல எழுத்தாளர்கள் இராம கண்ணபிரான், ஜெயந்தி சங்கர் போன்றோரும் பங்கேற்கின்றனர்.
மேலும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் பலரும் தங்களது எழுத்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
நிகழ்ச்சிகள் எண் 1, ஓல்ட் பார்லிமெண்ட் ரோட்டில் உள்ள தி ஆர்ட்ஸ் ஹவுஸில் நடைபெறுகின்றன.
விழாவின் தமிழ் நிகழ்ச்சிகள்:
அக்டோபர் 31ம் தேதி மாலை 6.00க்கு எழுத்தாளர் மாதுமையுடன் சந்திப்பு.
அக்டோபர் 31ம் தேதி இரவு 7.00க்கு ‘உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துங்கள்’ பெண் தமிழ் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல்.
நவம்பர் 1 தேதி மாலை 3.00க்கு கலந்துரையாடல். பரிணாம வளர்ச்சியில் புத்தகங்களின் தாக்கம் குறித்து பேசுகின்றனர் - த.பழமலய், அப்பள நரசய்யா, மீரா சாந்த், ராபர்ட் இயோ.
நவம்பர் 1 தேதி, மாலை 4.00க்கு கவிஞர் த.பழமலயுடன் சந்திப்பு.
நவம்பர் 1 தேதி, மாலை 5.00க்கு அப்பள நரசய்யாவுடன் சந்திப்பு.
No comments:
Post a Comment