Pages

Saturday, October 17, 2009

சபரிமலை மேல்சாந்தி


சபரிமலை மேல்சாந்தியாக ஆலப்புழாவை சேர்ந்த ஜி.விஷ்ணு நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். மாளிகைப்புறம் கோயிலுக்கு மாதவன் நம்பூதிரி தேர்வு செய்யப் பட்டுள்ளார். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை தற்போது திறந்துள்ளது. நேற்று காலை உஷபூஜைக்கு பின்னர் மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நடைபெற்றது.


சபரிமலை மேல்சாந்திக்காக தேர்வு செய்யப்பட்ட ஒன்பது பேர் பெயர் துண்டு சீட்டில் எழுதபட்டு வெள்ளி பாத்திரத்தில் அடைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பின்னர் குலுக்கல் நடைபெற்றது. இதில் ஆலப்புழா மாவட்டம் செறுகோல் பகுதியை சேர்ந்த ஜி. விஷ்ணு நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இதுபோல மாளிகைப்புறம் கோயிலுக்கு நடைபெற்ற குலுக்கல் தேர்வில் எர்ணாகுளத்தை சேர்ந்த கே.சி. மாதவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இதில் சபரிமலை முதன்மை ஆணையர் ஜெயக்குமார், கேரள ஐகோர்ட் நியமித்துள்ள சிறப்பு பார்வையாளர் நீதிபதி பாஸ்கரன், சிறப்பு கமிஷனர் நீதிபதி ராஜேந்திரன்நாயர் , நிர்வாக அதிகாரி ஜெயக்குமார், பி.ஆர்.ஓ. முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேல்சாந்திகள் நவ.,16ல் பொறுப்பேற்பார்கள்.

No comments:

Post a Comment