அமெரிக்காவில் சியாட் டில் நகரின் தெற்கே 35 மைல் தொலைவில் டகோமா என்ற இடத்தில் விமானப்படை தளம் உள்ளது. அங்குள்ள விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு 4 போலீஸ் அதிகாரிகள் நேற்று காலை வந்தனர்.
வேலைக்கு செல்வதற்கு முன்பு அங்குள்ள காபி ஷாப் ஒன்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். லேப்- டாப் மூலம் தங்கள் பணிகளை பிரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 மர்ம மனிதர்கள் காபி ஷாப்புக்குள் நுழைந்தனர். துப்பாக்கியை எடுத்து 4 போலீஸ் அதிகாரிகளையும் குறி பார்த்து சுட்டனர்.
4 போலீஸ் அதிகாரிகளின் உடம்பிலும் ஏராளமான குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே அவர்கள் 4 பேரும் உயிரிழந்தனர். அதன் பிறகு 2 மர்ம மனிதர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மர்ம மனிதர்கள் காபி ஷாப்புக்குள் இருந்த மற்றவர்கள் யாரையும் சுடவில்லை. எனவே 4 போலீஸ் அதிகாரிகளை கொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு மர்ம மனிதர்கள் பதுங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.
Monday, November 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment