முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.ஸ். இளங்கோவனின் வீடு அடையாறு இந்திரா நகரில் உள்ளது. இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டு களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது இளங்கோவன் வீட்டில் இல்லை. அவரது உதவியாளர் மோசஸ் மட்டும் வீட்டில் இருந்தார். வெடிச்சத்தம் கேட்டு கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். கதவு அருகில் கண்ணாடி துகள்கள் சிதறிக்கிடந்தன. பிளாஸ்டிக் சேர் தீயில் கருகி கிடந்தது. பெட்ரோல் வாசனை வீசியது.
இதுகுறித்து அவர் உடனடியாக அடையாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
உதவி கமிஷனர் கார்த்தி கேயன், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக டைரக்டர் சீமான் ஆதரவாளர்களான மித்ரன், மணி, அருள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மித்ரன் டைரக்டர் சீமானிடம் உதவி இயக்குனராக உள்ளார். கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுடன் மதுரையை சேர்ந்த என்ஜினீயர் விஜயகுமார் (வயது 30) என்பவரும் காரில் வந்துள்ளார். இவர் டைரக்டர் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தில் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் தேடுவதை அறிந்ததும் விஜயகுமார் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிப்பதற்காக சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்துள்ளனர்.
Saturday, November 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment