Pages

Saturday, November 28, 2009

அர்ச்சகரின் அக்கௌண்டில் ரூபாய் எண்பது லக்ஷம் ?


காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக பணி புரிந்து வந்தவர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில் காஞ்சீபுரம் கோர்ட்டில் தேவநாதன் சரண் அடைந்தார். அவரை 2 முறை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸ் விசாரணையில் அர்ச்சகர் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்த பெண்கள் யார்-யார் என்பது தெரிய வந்துள்ளது.

அர்ச்சகர் தேவநாதன் 25 பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகியுள்ளது. இதில் குண்டு பெண் ஒருவர் கருவறையில் வைத்து தேவநாதனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபடுவது போன்ற சி.டி.யும் ஒன்று அந்த பெண் யார் என்பது தற்போது அடையாளம் தெரிந்துள்ளது. கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் அப்பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பெரிய இடத்துப் பெண்கள் (தொழில் அதிபர்களின் மனைவிகள்) 3 பேரும் அர்ச்சகரின் வலையில் விழுந்துள்ளனர். 2 பள்ளி மாணவிகளின் வாழ்க்கையையும் தேவநாதன் நாசப்படுத்தியுள்ளார். விப சார அழகிகள் 3 பேரும் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இவர்கள் அனைவரிட மும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விசாரணை மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது.

அர்ச்சகர் தேவநாதன் தன்னுடன் உல்லாசமாக இருக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளார். இதற்காக கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை பணத்தையும் திருடியுள்ளார்.

இந்த பணத்தை வைத்துக் கொண்டு நட்சத்திர ஓட்டல்களிலும் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அர்ச்சகருடன் உல்லாசமாக இருந்த பெண்கள் பலர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு தப்பிச்சென்று விட்டனர்.

இவர்களது பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே சிவகாஞ்சி போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு நேற்று இரவு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமயில் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணயை தொடங்கியுள்ளனர்.

காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் வைத்து பெண்களை ஆபாச படம் எடுத்த அர்ச்சகர் தேவ நாதன் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை முதலில் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது அவரிடம் இருந்து மேலும் முழுமையான விவரங்களை பெறுவதற்காக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த போலீசார் கோர்ட்டு உத்தரவுபடி 3 நாள் காவலில் எடுத்தனர்.

நேற்று இரவோடு இரவாக செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனை வேலூர் ஜெயிலில் இருந்து காஞ்சீபுரம் அழைத்து வந்தனர். இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் தலைமையிலான சிவகாஞ்சி போலீசார் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் தேவநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள், மெமரி கார்டுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

இதில் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் தேவநாதன் பெயரில் ரூ. 80 லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து தினந்தோறும் தீபாராதனை தட்டுகளில் விழும் காசை நம்பி குடித்தனம் நடத்தி வந்த குருக்கள் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் வந்தது எப்படி? என்று கண்டு பிடிக்கும் வேலையில் போலீசார் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மெமரி கார்டில் மேலும் 5 பெண்களின் ஆபாச படங்கள் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் யார்? எவ்வளவு நாட்களுக்கு முன்பு அந்த படம் எடுக்கப்பட்டது என்பன போன்ற கோணங்களில் தேவநாதனிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர்.

அப்போது அவர் ஒவ்வொருத்தரும் தங்கள் செல்போனில் அவா, அவாவுக்கு பிடித்தவாளை படம் எடுத்து வைத்திருப்பார்கள். அது நடிகையாக கூட இருக்கும். அதே போலதான் எனக்கு பிடித்த பொம்மனாட்டிகளை படம் பிடித்து வைத்திருந்தேன். இதெல்லாம் குற்றமென்னு சொன்னால் எப்படி? அவாளை யாருன்னு காட்டி கொடுக்கமாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார்.

அவரிடம் உரிய முறையில் விசாரித்து உண்மையை வெளிகொண்டு வரும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு அதனை ரகசியமாக காமிராவில் படம் பிடித்தார். இவரது ஆபாச படம் செல்போனில் பரவியது. தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் தேடினர். இதையடுத்து அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்த போது அவர் திடுக்கிடும் வாக்கு மூலம் அளித்தார். அதில் தான் 8 பெண்களை மட்டும் ஆபாச படம் எடுத்ததாக கூறினார். அவர்களது பெயர்களை மாற்றி கூறியும், உண்மையான தகவல்களை கூறாமலும் போலீசாரை ஏமாற்றினார். இதையடுத்து தேவநாதனை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க போலீசார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

காஞ்சீபுரத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரிடம் தேவநாதன் நைசாக பேச்சு கொடுத்து நல்லவர் போல பழகி உள்ளார். அவரிடம் கருவறைக்குள் கண்ணை மூடி வேத மந்திரங்கள் சொன்னால் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெறலாம் என்று ஆசை காட்டி உள்ளார்.

மாணவியிடம் சில்மிஷங்கள் செய்து அதை செல்போனில் படம் பிடித்துள்ளார்.

தேவநாதன் தனது மனைவியையும் ஆபாச படம் பிடித்து வைத்துள்ளார். என்ற தகவலும் போலீசுக்கு கிடைத்துள்ளது. தேவநாதனின் செயலுக்கு உடந்தையாக அந்த பகுதியை சேர்ந்த பூக்காரி ஒருத்தி இருந்துள்ளார்.

அவர் தேவநாதனை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை கூறி வருகிறார். இந்த வழக்கில் அவரை முக்கிய சாட்சியாக சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவள் கூறிய தகவல்படி 20க்கும் மேற்பட்ட பெண்களை தேவநாதன் ஆபாசமாக படம் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment