Pages

Tuesday, November 24, 2009

ஒரே கட்சி நாட்டை ஆண்டால் இப்படித்தான் ?

நாட்டில் ஏற்படும் மதக்கலவரங்களை விசாரித்து, கலவரங்களை தூண்டுபவர்களுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலுக்கு வழங்கப்பட வேண்டும் என்று, "லிபரான்' கமிஷன் கொடுத்த பரிந்துரையை உள்துறை அமைச்சகம் நிராகரித்து விட்டது.


அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷனின், 1,000 பக்க அறிக்கையையும், அதன் மீது அரசு எடுக்கப் போகும் மேல் நடவடிக்கைகள் குறித்தும், உள்துறை அமைச்சர் சிதம்பரம், பார்லிமென்டின் இரு அவைகளிலும் நேற்று தாக்கல் செய்தார்.கமிஷனின் பரிந்துரை குறித்த அரசின் நடவடிக்கைகள் விவரம்: தேசிய ஒருமைப்பாடு கவுன்சிலுக்கு, உள்துறை அமைச்சகம் ஒரு ஆலோசனைக் கூட்டம் அமைத்து, அந்த கவுன்சிலுக்கு தண்டனை கொடுக்கும் அதிகாரம் வழங்குவது சாத்தியமான யோசனையாக இருக்காது. இந்த அமைப்பு, மதச்சார்பற்ற கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கும் அமைப்பு.


லிபரான் கமிஷன் தனது அறிக்கையில், "அத்வானி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகள் தான், பாபர் மசூதி 1992ல் இடிக்கப்பட்டதற்கு காரணம் என்று கூறிய போதிலும், அரசின் மேல் நடவடிக்கை அறிக்கையில், எந்த அரசியல் தலைவர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக தெரிவிக்கவில்லை."ஏற்கனவே, பாபர் மசூதி இடிப்பு குறித்து பல்வேறு கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். "அரசியல் தலைவர்கள், அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட பதவி வகிப்பவர்கள், மதச்சார்புள்ள இயக்கங்களில் பதவிகள் வகிப்பதை உடனடியாக தடை செய்ய வேண்டும்' என்ற கமிஷனின் சிபாரிசு திருப்தி தரும் தகவல்.


ஜாதி, மதம் பெயரால் அரசியல் லாபம் அடைய நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான தனிச்சட்டம் மத்திய அரசு கொண்டு வருவதுடன் துரித நடவடிக்கை தேவை என்ற கருத்தையும் அரசு ஏற்றிருக்கிறது.மதக்கலவரங்களை விசாரிக்க தனி புலனாய்வு போலீஸ் படையை உருவாக்க வேண்டும். கலவரங்கள் மீது குற்றச் சாட்டுக்கள் பதிவான பின், எந்த அரசியல் நோக்கத்திற்காகவும், அந்த குற்றங்களையோ அல்லது நிலுவையில் உள்ள வழக்குகளையோ வாபஸ் பெற அரசுக்கு இப்போது இருக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அரசு ஏற்றது.மதஉணர்வுகளை தூண்டும் கட்சிகள், தலைவர்கள் பதவி நீக்கம் குறித்து தேர்தல் கமிஷன் வழிவகை செய்ய வேண்டும் என்ற கருத்தை தேர்தல் கமிஷன் பார்வைக்கு அரசு அனுப்ப முன் வந்திருக்கிறது.

No comments:

Post a Comment