இளங்கோவன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளங்கோவன் வீட்டு முன்பு திரண்டிருந்த காங்கிரசார் அடையாறு மெயின் ரோட்டுக்கு ஊர்வலமாக வந்தனர்.
அடையாறு போலீஸ் நிலையம் எதிரே நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். தீவிர வாதத்தை கண்டிக்கும் வகையில் உருவப்பொம்மை எரித்தார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. இந்த போராட்டத்தில் தென்சென்னை மாவட்ட தலைவர் மங்கள்ராஜ், ரங்கபாஷ்யம், வி.ஆர்.சிவராமன், குணா, ராஜ் குமார், மடிப்பாக்கம் செந்தில்நாதன், திருவள்ளுர் மாவட்ட முன்னாள் தலைவர் ஜேம்ஸ், அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மங்கள்ராஜ் அடையாறு போலீஸ் துணை கமிஷனரிடம் ஒரு புகர் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
மன்னாள் மத்திய மந்திரி இளங்கோவனை கொலை செய்யும் நோக்கத்துடன் திட்டம் தீட்டி, அவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
கதவு, ஜன்னல், பிளாஸ் டிக் சேர் எரிந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.
அங்கிருந்த காவலாளி மோசஸ் மயிரிழையில் உயிர் தப்பி உள்ளார். இதில் சம்பந்தப்பட்ட அனை வரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.
Saturday, November 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment