Pages

Monday, November 30, 2009

மன்சூரலிக்ஹான் சிட்டிபாபு மீது செக் மோசடி வழக்கு - அரசியல் பின்னனியா?

நடிகர் மன்சூர்அலிகான் எழும்பூர் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

சினிமா படம் தயாரிக்க நடிகர் சிட்டிபாபு என்கிற சாஜித் அதீப் கடந்த 22.12.2008 அன்று என்னிடம் ரூ. 6 லட்சம் வாங்கினார். இந்த தொகையை பல்வேறு தவணைகளாக என்னிடம் பெற்றுக் கொண்டார். இந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை.

இதே போல அவரது மனைவி ஜெரீனா என்பவரும் என்னிடம் ரூ. 7 லட்சத்து 17 ஆயிரம் கடன் வாங்கினார். இவரும் பணத்தை திருப்பித் தரவில்லை.

அதற்கு பதில் காசோலைகளை இருவரும் தனித்தனியாக கொடுத்தனர். ஆனால் அவர்களது வங்கி கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

எனவே அவர்கள் மீது செக் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் நடிகர் மன்சூர்அலிகான் கூறி இருந்தார்.

இந்த மனு மீதான வழக்கு விசாரணை எழும்பூர் 14-வது கோர்ட்டு நீதிபதி காஞ்சனா முன்பு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் ஆஜராகும்படி சிட்டிபாபு, அவர் மனைவி ஜெரீனாவுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

ஆனால் அவர்கள் இன்று கோர்ட்டுக்கு வரவில்லை. இதனால் நடிகர் சிட்டிபாபு, ஜெரீனாவை கைது செய்து ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி காஞ்சனா உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment