
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, அடுத்த மாதம் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி, முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே, நான்கு பேர் பிறழ் சாட்சிகள் அளித்த நிலையில், மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படுவதாக இருந்தது.
வழக்கில், சுந்தரேச அய்யர், அப்பு, ரகு உள்ளிட்ட 11 பேர் ஆஜராகினர். ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 13 பேர் ஆஜராகவில்லை. புதுச்சேரி வக்கீல்கள் கடந்த 20ம் தேதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வக்கீல்கள் நேற்றும் கோர்ட் பணிகளை புறக்கணித்ததால் வழக்கு விசார�ணையை அடுத்த மாதம் 16, 17ம் தேதிகளுக்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கிருஷ்ணராஜா தள்ளி வைத்தார்.
No comments:
Post a Comment