தன்னை காண வந்த ரசிகைகள் உற்சாக மிகுதியில் கண்ணீர் வடித்ததால் கமல்ஹாசனும் கண் கலங்கினார். கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி விஜய் டி.வி. சார்பில் கடந்த ஒரு மாதமாகவே சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். அதோடு நில்லாமல் ரசிகர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் கமலுடன் சந்திப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தது விஜய் டி.வி.! போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ரசிகர் - ரசிகைகள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து கலகலப்பாக பேசி மகிழ்ந்தனர். ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி விஜய் டி.வி.,யில் ஒளிபரப்பானது. அப்போது கமல்ஹாசனை நேரில் பார்த்தது பற்றி ரசிகர்கள் பேசினார்கள். அப்போது ஒரு ரசிகை, கமலை கட்டிப்பிடித்து அழவேண்டும் போல் இருக்கிறது என்று கூறி உற்சாக மிகுதியில் கண்ணீர் வடித்தார். இதை கேட்டதும் கமல்ஹாசனும் கண் கலங்கினார். கமல் கண்கலங்குவதைப் பார்த்து அந்த அரங்கில் இருந்த அத்தனை ரசிகர்களும் கண்கலங்கினார்கள்.
கொடுமைடா சாமி ? இது மாதிரி பைத்தியங்கள் இருக்கும் வரை தமிழ் நாடு உருப்படாது ?
- நக்கல் நாகராசன்
Wednesday, November 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment