அகதிகள் முகாமிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்ற நூற்றுக்கும் அதிகமானவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையில், ஏராளமான தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி பல மாதங்களாக அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் பலர், ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்கின்றனர்.கடந்த மாதம் தப்பிச் சென்ற 78 தமிழர்களை, இந்தோனேசியாவும் ஆஸ்திரேலியாவும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால், இந்த அகதிகள் பல நாட்களாக நடுக்கடலில் படகில் தத்தளித்தனர். இந்த அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் படி, இந் தோனேசியாவிடம் ஆஸ்திரேலிய அரசு கேட்டு கொண்டது. ஒரு மாதம் கழித்து இவர்களை அழைத்துக் கொள்வதாக, ஆஸ்திரேலியா கூறியதன் பேரில், தமிழர்கள் சிலர் தற்போது இந்தோனேசியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் பலர், அகதிகள் முகாமிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நான்கு மீன் பிடி படகுகள் மூலம் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், இவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து மீண்டும் அகதி முகாமில் அடைத்துள்ளனர்.கடற்படை அதிகாரி அதுலா சேனரத் என்பவர் குறிப்பிடுகையில், "அகதிகள் பலர் கணிசமான பணத்தை செலவழித்து, ஆஸ்திரேலியா தப்பிச் செல்கின்றனர். இப்படி கள்ளத் தனமாக செல்வது ஒரு வகை கடத்தலாகும்' என்றார்.
Wednesday, November 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment