Pages

Saturday, November 28, 2009

பணம் கொட்டும் பாலிவூட் - கருப்பு பண முதலைகளின் ஊடுருவல் ?

பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் சினிமாவில் நடிக்க் வாங்கும் சம்பளத்தை விட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள். நடிகர்களைப் பொறுத்த வரை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அதிக சம்பளம் வாங்குபவர் நடிகர் ரித்திக் ரோஷன். இவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நிமிடத்துக்கு ரூ.4.25 லட்சம் சம்பளம் கேட்கிறாராம். நிகழ்ச்சி முடியும் வரை இருக்க வேண்டுமானால் ரூ.2 கோடி சம்பளம். அவருக்கு அடுத்தபடியாக சல்மான் கான் அதிக சம்பளம் பெறுகிறார். இவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நிமிடத்துக்கு ரூ.4 லட்சம் வாங்குகிறார். அதேநேரம் முழு நிகழ்ச்சியிலும் இருக்க வேண்டும் என்றால் ரூ.1 கோடி சம்பளமாம். அவரைப் போலவே நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் நடிகை கத்ரினா கைப். இவர் நிமிடத்துக்கு ரூ.2 லட்சம் சம்பளம் கேட்கிறாராம். கரீனா கபூரை ‌பொறுத்தவரை நிமிடத்துக்கு ரூ. 1லட்சம் சம்பளம் பெறுகிறார். ஷாரூக் கான் கொஞ்சம் பெருந்தன்மையுடன் மக்களுக்கு பயன்படக்கூடிய விழிப்புணர்வு உள்ளிட்ட சில நிகழ்ச்‌சிகளில் பங்கேற்க ரூ.10 ஆயிரம் வாங்குகிறார். வர்த்தக நிறுவன நிகழ்ச்சியென்றால் லட்சங்களில் சம்பளம் கேட்டுப் பெற்று வருகிறார்.

No comments:

Post a Comment