சீனாவில் தயாரித்து பிரபல பிராண்டுகளின் பெயரில் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு கோடி ரூபாய் மதிப் பிலான, பாடிஸ்பிரேக்கள்' பறிமுதல் செய்யப்பட்டன. சீனாவிலிருந்து அடுத்தடுத்து பல்வேறு வகையான போலி தயாரிப்புகள் அனுப்பப்படுவ தைத் தொடர்ந்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங் களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த அலிஹான் என்பவருக்கு,கப்பல் மூலம் அடுத்தடுத்து இரண்டு கன்டெய்னர்களில்,பாடி ஸ்பிரே பாட்டில்கள் வந்தன.
சந்தேகத்தின் பேரில், சுங்கத்துறைகமிஷனர் ராஜன்மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிரபல பிராண்டுகளின் பெயரில்,பல்வேறு நாட்டில் தயாரிக்கப்பட்டது போன்ற ஸ்டிக்கர் கள் இருந்தன. சோதனையில்இவை போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து,இரண்டு கன்டெய்னர்களிலும் அனுப்பி வைக்கப்பட்ட 1.19 லட்சம் பாடி ஸ்பிரே' பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு இரண்டு கோடி ரூபாய்.
இது குறித்து சென்னை சுங்கத் துறை ஆணையர் ராஜன் கூறியதாவது:சீனாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட, பாடி ஸ்பிரேக்களைப் பயன்படுத்துவதால் தோல் நோய் ஏற்படும்.எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும். தீவிர விசாரணை நடந்து வருகிறது. பாடிஸ்பிரே வாங்கும்போது பொதுமக்கள்உஷாராக இருக்க வேண்டும்.
ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டபோலியான பேபி ஆயில்,குளியல் சோப் போன்றவை அவற்றின் மதிப்பில் 10சதவீதம் அபராதம் விதித்து, அந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப் பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வரும் கன்டெய்னர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
அதிகாரிகள் இடமாற்றம்: சுங்கத்துறையில் விஜிலன்ஸ் பிரிவு பலப்படுத்தப் பட்டுள்ளது. அதிகாரிகள் மீது ஏதேனும் புகார்கள் வந்தால், அவர்களை உடனுக்குடன் இடமாற்றவும் முடிவு செய்துள்ளோம். இவ் வாறு ராஜன் கூறினார்.
இதுபோன்றே கடந்த மூன்று மாதங்களில் அடுத்தடுத்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சீன பொம்மைகள், அழகுசாதனப் பொருட்கள், எலக்டிரானிக்ஸ் பொருட்கள், குழந்தைகள் சோப்பு, ஷாம்பு மற்றும் சாக்லெட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் சீனா தொடர்ந்து "சில்மிஷ' வேலைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பொட்டாஷ் கடத்தல்5 பேர் மீது காபிபோசா!:இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானியமாக வழங்க வேண்டிய பொட்டாஷ் உரம், தொழிற்சாலை உப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் இது அம்பலத்திற்கு வந்தது.
இது தொடர்பாக சுங்கத்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. இதன் மூலம் பல கோடி மதிப்பிலான உரம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளது. பொட்டாஷ் கடத்தலில் இதுவரை ஐந்து பேர் காபி போசா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Thursday, November 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment