Wednesday, November 25, 2009
உலகம் அழிவதை பார்க்க பணத்தை கொட்டும் தமிழன் ?
இப்படம் வந்தபோது அடை மழை கொட்டியது. சென்னை உள்பட பல நகரங்கள் வெள்ள பெருக்கில் தத்தளித்தன. ஆனாலும் தியேட்டர்கள் நிரம்பி வழிந்தது. கொட்டும் மழையை பொருட்படுத்தாது படம் பார்க்க கூட்டம் கூட்டமாய் வந்தனர். சில பகுதிகளில் இதனால் போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டது. “2012” திரையிடப்பட்ட முதல் வாரத்திலேயே ரூ. 402 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
“டைட்டானிக்” படம் முதல் வாரத்தில் ரூ. 10 கோடிதான் வசூலித்தது. “மம்மி” ரூ. 9 கோடி வசூல் செய்தது. அவ்விரு படங்களின் வசூலை முறியடித்துள்ளது “2012. ரூ. 70 கோடியை தாராளமாக இப்படம் வசூலிக்கும் என்றார் இதன் வினியோகஸ்தரான செவன்ஸ்டார் இன்டர்நேஷனல் ஏ.வி.மோகன். ரூ. 100 கோடியை எட்டவும் வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் சொன்னார்.
தமிழ்நாடு முழுவதும் 119 பிரிண்ட்களுடன் இதை திரையிட்டுள்ளனர். அதில் 6 பிரிண்ட்கள் மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளன. மற்றவை தமிழ் பிரிண்ட்கள். சென்னையில் மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட பெரிய தியேட்டர்களில் ஆங்கிலத்தில் திரையிடப்பட்டு உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி பெரம்பூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கூறும்போது, "படம் பிரமாண்டமாக உள்ளது. கிராபிக்ஸ் மிரட்டல்கள் சீட் நுனியில் உட்கார வைக்கின்றன. இந்த படத்தை சென்னையின் மத்தியில் பெரிய தியேட்டர் ஒன்றில் தமிழில் திரையிட்டு இருந்தால் ஆங்கிலம் தெரியாத பெற்றோரும், குழந்தைகளும் பார்த்து சந்தோஷப்பட்டு இருப்பார்கள்" என்றார்.
“இன்டிபென்டன்ஸ் டே” மற்றும் “டேஆப்டர் டூமாரே” படங்களை எடுத்த “ரோலண்ட் எம்மரிச்” இப்படத்தை இயக்கியுள்ளார். “2012“-ல் நில நடுக்கத்தால் பூமி பிளந்து நகரங்கள் புதைவதும், சுனாமி வந்து நில பரப்பை விழுங்குவதும்தான் கதை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment