"சத்யமேவ ஜயதே என்ற வாக்கியம் பொறிக்கப்படாத நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, இந்திய அரசின் சின்னம் ஒழுங்காக எல்லா இடங்களிலும் பொறிக்கப்பட வேண்டும் என்று நான் எப்படி தீர்ப்பளிக்க முடியும்?' என்று கேட்டுள்ளார் ஐகோர்ட் தலைமை நீதிபதி. "சத்யமேவ ஜயதே வாக்கியம் பொறிக்கப்படாத அரசு சின்னம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. எனவே அரசு கட்டடங்கள், ஆவணங்கள், வாகனங்கள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்திலும் அரசு சின் னம் அந்த வாக்கியத்தோடு முறையாகப் பொறிக்கப்பட்டிருக்க வேண் டும்' என்று சமீபத்தில் ஒரு பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது.
அதன் படி, நீதிபதிகளின் நாற்காலியில் உள்ள அரசு சின்னத்தில் அந்த வாக்கியம் பொறிக்கப்பட்டது. கோல்கட்டா ஐகோர்ட் தற்காலிக தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச் சார்யா முன் ஒரு பொதுநல வழக்கு வந்தது. அதில்,"இந்திய அரசு சின்னமான அசோக சக்கரத்துடன் "சத்யமேவ ஜயதே' என்ற வாக்கியத்துடன் எல்லா இடங்களிலும் சரியாகப் பொருத்தப்பட வேண்டும் என்ற கோர்ட் உத்தரவு உறுதி செய்யப்பட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வக்கீல், நீதிபதியின் நாற்காலியில் கூட "சத்யமேவ ஜயதே' என்ற வாக்கியம் பொறிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். அதோடு நீதிபதிகளின் பியூன்கள் சட்டையில் பொருத்தப்பட்டுள்ள வில்லையில் அந்த வாக்கியம் தாறுமாறாகக் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே நீதிபதி, "சத்யமேவ ஜயதே பொறிக்கப்படாத நாற்காலியில் இருந்து கொண்டு, அரசு சின் னம் முறையாகப் பொறிக்கப் பட்டுள்ளதா என்று உறுதிசெய்யப் பட வேண்டும் என நான் எப்படி உத்தரவிட முடியும்? நான் இந்த நாற்காலியில் உட்கார மாட்டேன்" என்று மறுத்து, சென்று விட்டார். இடைவேளைக்குப் பிறகு அவர் சாதாரண நாற்காலியைப் போட வைத்து அதில்தான் அமர்ந்தார்.
Saturday, November 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment