Pages

Wednesday, November 25, 2009

வசுந்த்தராவின் ஆசைகள் ?


நடிகை... பாடகி... பாடலாசிரியர் என்று எப்படி வேண்டுமானாலும் வசுந்தராதாஸைக் கூறலாம். இந்த மொழுமொழு அழகுப்பெண், இந்தி, தென்னக மொழிப்படங்களில் தேவதையாக உலா வந்தார்.

லேட்டஸ்டாக இந்தி `ஆசிட் பாக்டரி' படத்தில் பாடியிருக்கும் வசுந்தரா, புகழ்பெற்ற டிரம் இசைக்கலைஞர்கள் ராபர்ட்டோ நரேன், உரியன் சார்மியன்டோ ஆகியோருடன் இணைந்து செயல்படுகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவுக்கு ஒரு `லெக்சர் பயணம்' மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறார்.

``ஏ.ஆர். ரகுமானின் ஆன்மிக ஆர்வமும், மாறாத அறிவு ஜீவித் தன்மையும் எனக்குப் பெரும் ஊக்கமான விஷயங்கள். அதைப் போல எனது பாட்டி. அவர்தான் என்னுடைய முதல் குரு'' என்கிறார் வசுந்தரா. தனக்குப் பிடித்தமான விஷயங்களை அவர் பட்டிய லிடுகிறார்.

உங்களுக்குப் பிடித்த உடை: சமையல் அறை ஆடை. (எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது நான் அதை முதன்முதலில் அணிந்தேன்.)

பிடித்த பானம்: சூடான சாக்லேட் பானம்.

விரும்பிச் சமைப்பது: தாய்லாந்து நாட்டு கறிவகை.

பிடித்த உணவகங்கள்: பெங்களூரில் உள்ள `ஒன்லி பிளேஸ்' மற்றும் `காப்பர்பெர்ரி'.

வசதியான ஆடையாகக் கருதுவது: ஜீன்ஸ் மற்றும் டி- ஷர்ட்.

படித்ததில் பிடித்தது:
கேப்ரியல் கார்சியா மார்க்கஸ் எழுதிய `ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆப் சாலிட்டிïட்'.

பிடித்த திரைப்படம்: ஸ்டான்லி டுச்சி நடித்த `தி பிக் நைட்'.

அதிகமாகப் பயப்படுவது: இருட்டுக்கு.

பிடித்த வேளை: அதிகாலை.

பிடித்த விளையாட்டு:
பார்முலா ஒன் கார் பந்தயம்.

பிடித்த இசைக் கலைஞர்: எல்விஸ் பிரெஸ்லி.

கனவுச் சுற்றுலா:
உலகை 80 நாட்களில் சுற்றி வருவது.

அதிர்ஷ்டப் பொருள்:
அதிர்ஷ்டப் பொருட்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. நமது விதிக்கு நாமே பொறுப்பு.

பிடித்த பருவகாலம்:
வசந்தம் அல்லது கோடை காலம். அது அப்போதைக்கு நான் உலகத்தின் எந்தப் பகுதியில் இருக்கிறேன் என்பதைப் பொறுத்தது.

பிடித்த நகரங்கள்:
வெளிப்படையான தன்மை, ஊக்கத்துக்காக நியூயார்க், அழகு, கலாசாரத்துக்காக பார்சிலோனா.

ஒரு மகிழ்ச்சியான நாளுக்கான குறிப்பு: அது இசையும், சாகசமும் நிரம்பியதாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு ஒரு `ரொமான்டிக்கான டின்னருக்கு'த் தேவை:
மெழுகுவர்த்திகள், ஒயின், அருமையான உணவு... அப்புறம் நிறையச் சிரிப்பு.

உங்களைப் பொறுத்தவரை இசை என்பது:
வாழ்க்கை.

No comments:

Post a Comment