"இது நாள் வரை நாம் இந்தியாவில் படித்து வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றோம். இனி, இந்தியாவுக்குத் திரும்புங்கள் என்று நான் உங்களை அழைக்கிறேன்,'' என பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க வாழ் இந்தியர்களைக் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அமெரிக்கர்களிடையே உரையாற்றும் போது அவர் கூறியதாவது: எனது அமெரிக்க பயணம் மற்றும் இரு தரப்பின் பேச்சு வார்த்தைகள் எனக்கு திருப்தியளித்துள்ளன. இதன் மூலம் இரு தரப்பு அரசியல் மற்றும் பொருளாதார உறவு வலுப்படும். இரு தரப்பிலான புரிந்துணர்வு இந்தப் பயணத்தின் மூலம் அதிகரித்துள்ளது. இந்த 21ம் நூற்றாண்டில் உலக சவால்களை எதிர்கொள்வதில், இந்திய அமெரிக்க உறவு முக்கிய பங்கு வகிக்கும். உலகில் அமைதி மற்றும் நிலையான அரசியல் நிலவுவதற்காக, நமது விழுமியங்கள், ஒத்த கருத்துக்கள் மற்றும் ஒத்துழைப்பு இவற்றின் அடிப்படையில் இரு நாடுகளும் பணியாற்றுவதை வரலாற்று வாய்ப்பாக நாம் கருத வேண்டும். பொருளாதாரம், ஆற்றல், சுற்றுச்சூழல், கல்வி மற்றும் அதிகாரம் என்ற ஐந்து வகையில் உருவாகும் இரு தரப்பிலான உறவு, நம்மை அடுத்த பரிணாமத்துக்கு இட்டுச் செல்லும்.
கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் கல்வி கற்று, வெளிநாடுகளுக்குச் செல்வதில் நாம் போதுமான அனுபவம் பெற்று விட்டோம். இப்போது, இரு தரப்பு அறிவுகளும் சங்கமிக்கும் வகையில் திரும்பவும் இந்தியாவுக்கு வாருங்கள் என்று நான் உங்களை அழைக்கிறேன். இன்றைய தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் நிகழ்ந்துள்ள நெகிழ்வு இவை இரண்டும், இரு நாடுகளிலும் பணியாற்றும் வாய்ப்புகளைத் தோற்றுவித்துள்ளன. ஏதாவது ஒரே இடத்தில் இருந்து தான் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் இன்று நாம் இல்லை. இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
Thursday, November 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment