
சத்யராஜ், கணேஷ் வெங்கட்ராம், ரம்யாநம்பீசன், ஜெய்பிரகாஷ், ராஜ்கபூர், ராஜா மற்றும் பலர் நடிக்கின்றனர். எடிட்டிங் -சுரேஷ்அர்ஸ், வசனம்-ஷக்தி கிருஷ்ணா, இசை- டி.இமான், ஒளிப்பதிவு -பாலமுருகன், திரைக்கதை இயக்கம்- செல்வா, தயாரிப்பு-புஷ்பா கந்தசாமி. வேகமாக ஓடும் இன்றைய வாழ்க்கையில் அடுத்தவர்களுக்கு உதவி செய்வது என்பது முடியாத காரியமாகி விடுகிறது. ஆனால் தேவன் என்ற சாதரான மனிதன் செய்த உதவியால் என்ன நடக்கிறது என்பதே கதையின் கரு.
தேவன் கதராபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். சமூக விரோதிகள் தீட்டும் சதி திட்டத்தை முறியடிக்க போராடும் இளைஞனாக கணேஷ்வெங்கட்ராம். ஒரு பெண்ணின் தையரித்தை வெளிபடுத்தும் கதாபாத்திரத்தில் ரம்யாநம்பீசன். ரசிகர்கள் என்றைக்கும் வித்தியாசமான திரைபடத்திற்கு பெரும் ஆதரவை தருகிறார்கள். அந்த வரிசையில் இந்த படத்தின் திரைக்கதை மக்களின் ரசனைகேற்ப அமைந்துள்ளது என்றார் இயக்குனர்.
No comments:
Post a Comment