Pages

Wednesday, November 25, 2009

ரூ.52 கோடி ஊதியம் பெற்ற முகேஷ் அம்பானி ?


கடந்த நிதி ஆண்டு அதிக ஊதியம் பெற்றதில் அனில் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். அவர் ரூ.52 கோடி பெற்றார்.
இந்திய தொழிலதிபர்களில் அதிக ஊதியம் பெறுபவர்களின் பட்டியலை பிசினஸ் இந்தியா இதழ், 2002 முதல் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. கடந்த நிதி ஆண்டின் (2008&09) பட்டியல் இப்போது வெளியாகி உள்ளது. அதன்படி, ரூ.52 கோடி ஊதியத்துடன் ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத் தலைவர் அனில் அம்பானி, நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறார்.

அவரது அண்ணனும், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவருமான முகேஷ், தனது சம்பளம், கமிஷன்களை 66 சதவீதம் குறைத்துக் கொண்டதால், ரூ.15 கோடி மட்டுமே ஊதியமே பெற்றார். அவருக்கு பட்டியலில 19வது இடமே கிடைத்தது.ஊதிய அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் மெட்ராஸ் சிமென்ட்ஸ் ராஜா (ரூ.28.7 கோடி), ஜிண்டால் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நவீன் ஜிண்டால் (ரூ.28.27 கோடி) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஊதியத்தில் பின்தங்கினாலும், டிவிடெண்ட் பெற்றதில் முகேஷ் முதலிடம் வகிக்கிறார்.

கடந்த ஆண்டில் அவர் பெற்ற டிவிடெண்ட் தொகை ரூ.930 கோடி. 2வது இடத்தில் விப்ரோ தலைவர் ஆசிம் பிரேம்ஜி உள்ளார். அவருக்கு ரூ.465 கோடி டிவிடெண்ட் கிடைத்தது. எச்.சி.எல். நிறுவனத்தின் சிவ நாடார் (ரூ.320 கோடி), அனில் அம்பானி (ரூ.256 கோடி), குமார் பிர்லா (ரூ.202 கோடி) ஆகியோரும் அதிக டிவிடெண்ட் பெற்றவர்கள் பட்டியலில் உள்ளனர்.

No comments:

Post a Comment