Pages

Wednesday, November 25, 2009

என்று தணியும் இந்த அமெரிக்கா மோகம் ?

சென்னை அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி ப்ரையன் டால்டன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் இருந்து சுற்றுலா, படிப்பு, வேலை உட்பட பல்வேறு காரணங்களில் ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் அமெரிக்கா செல்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலத்தினர் செல்வதற்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா வழங்கி வருகிறது. முன்பெல்லாம் விசா வழங்க 6 மாதம் ஆனது. தற்போது நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு அதிகபட்சம் 3 நாட்களில் விசா வழங்கப்படுகிறது. உலகிலேயே இந்தியாவில் இருந்துதான் அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.3 லட்சம் மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க வருகின்றனர். அமெரிக்க பொருளாதார மந்த நிலை காரணமாக அங்கு பணிபுரிவர்களை சார்ந்தவர்களுக்கு விசா வழங்கும் போது, அவர்களின் நிதிநிலையை பொறுத்து வழங்கப்படுகிறது. இந்தியாவில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் அமெரிக்காவிற்கு சென்ற இந்தியர்கள் பலர் நாடு திரும்பி வருகின்றனர். உலக பொருளதார மந்தநிலை காரணமாக அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்வதற்கான எச்1 விசா பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment