Pages

Friday, November 27, 2009

திருப்பதியில் காணிக்கை மறுப்பு ? குபேரன் கடன் ஏறியது ?

திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவறை முழுவதும் தங்கத் தகடுகள் பதிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தங்கத்தை நன்கொடையாக வழங்குமாறு பக்தர்களிடம் தேவஸ்தானம் கேட்டது.

இதையடுத்து பெயர் விவரங்களை அறிவிக்க விரும்பாத பலர் ஏராளமான தங்கங்களை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார்கள். இதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கருவறையில் தங்க தகடுகள் பதிக்கும் திட்டத்துக்காக பக்தர் ஒருவர் 25 கிலோ தங்க கட்டிகளை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்த எடுத்து வந்தார். அவர் தனது பெயர் விவரங்களை வெளியிட விரும்பவில்லை. இது பற்றி முதன்மை நிர்வாக அதிகாரி கிருஷ்ணாராவுக்கு கோவில் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

பெயர் விவரங்களை தெரிவிக்காவிட்டால் தங்க கட்டிகளை வாங்க வேண்டாம் என்று கிருஷ்ணா ராவ் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

இதையடுத்து அதிகாரிகள், தங்கம் கொண்டு வந்த பக்தரிடம் பெயர் விவரங்களை கூறிவிட்டு குடும்பத்துடன் வி.ஐ.பி. தரிசனம் செய்யுங்கள். இல்லாவிட்டால் தங்கத்தை உண்டியலில் போட்டுவிட்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டனர். இதையடுத்து அந்த பக்தர் அதிருப்தியுடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அவர் தங்க கட்டிகளை உண்டியலில் போட்டாரா அல்லது போடாமல் கையில் எடுத்துச்சென்று விட்டாரா என்பது உண்டியலை திறந்து பார்த்த பிறகு தெரியும்.

No comments:

Post a Comment