“ஆனந்தம்”, “கஸ்தூரி” உள்ளிட்ட பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் நடிகை ஆர்த்தி (வயது 22). தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். போரூரில் வாடகை வீட்டில் வசிக்கும் இவர் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பூபாண்டியன். இவரது மகன் சுகுமாரும், எனது தம்பி அரசும் நண்பர்கள். அந்த வகையில், எங்கள் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பூபாண்டியனும் வருவார். 2 வருடங்களுக்கு முன்பு எனது வீட்டில் இருந்து காசோலை புத்தகத்தை எடுத்துச் சென்று விட்டார். எனது தாயார் தேவைக்கு என்று காசோலையில் கையெழுத்து போட்டு வைத்திருந்தேன்.
அதை பயன்படுத்தி நான் அவரிடம் ரூ.20 லட்சம் பணம் வாங்கியதாக அவராக பத்திரம் தயார் செய்து கொண்டார். அந்த காசோலைகளை ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் என்று வங்கியில் போட்டு பணம் எடுக்கவும் முயற்சித்தார். காசோலை திருடுப்போனதாக வங்கியில் தகவல் தெரிவித்ததால், அத்தனை காசோலையும் பணம் இல்லாமல் திரும்பி அனுப்பப்பட்டது.
நான் கடன் வாங்கி கொண்டு ஏமாற்றுவதாக பொய் புகார் செய்தார். இது சம்பந்தமான வழக்கு விசாரணை பூந்தமல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது. நான் எனது அம்மாவுடன் கோர்ட்டுக்கு செல்லும் போதெல்லாம் ரவுடிகளை விட்டு மிரட்டுகிறார். விடாமல் தொல்லை தருகிறார். ஒருமுறை எனது காரை சேதப்படுத்தினார்.
பின்னர் நாங்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டு உரிமையாளர்களை மிரட்டி காலி செய்ய வைக்கிறார். கடந்த 2 வருடத்தில் அவர் கொடுத்த தொல்லைகளாலும் மிரட்டலுக்கும் பயந்து இதுவரை 5 வீடுகள் காலி செய்து விட்டோம். தற்போது போரூரில் கடந்த 5 மாதமாக வசித்து வருகிறோம்.
தினந்தோறும் வெவ்வேறு நபர்களை அனுப்பி பூபாண்டியன் மிரட்டி வருகிறார். “நீ மகாராணி போல வாழ வேண்டியவள். நான் சொல்வது போல் அனுசரித்து போ. பெரிய கதாநாயகி ஆக்கி காட்டுகிறேன் என்றும் தொல்லை செய்கிறார். அவர் மீது கொடுத்த புகார்கள் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
பூபாண்டியனின் தொடர் தொல்லைகளால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி தீராத தொல்லை தரும் பூபாண்டியன் மற்றும் அவரது ரவுடிகளிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க திருவேற்காடு இன்ஸ்பெக்டர் துரைராஜனுக்கு போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தொழில் அதிபர் பூபாண்டியனிடம் விசாரணை நடத்தி வருகின்றார். ( MODEL )
Friday, November 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment