Pages

Monday, November 30, 2009

ரஷ்யாவில் தீவரவாதம் ரயில் கவிழ்ப்பு

ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டதற்கு பயங்கரவாதிகள் வைத்த வெடிகுண்டு தான் காரணம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.ரஷ்யாவில் நெவ்ஸ்கி எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 28ம் தேதி மாஸ்கோ நகரில் இருந்து 661 பயணிகளுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்று கொண்டிருந்தது.மாஸ்கோவின் வடக்கு பகுதியில் இருந்து 350 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள உக்லோவா கிராமத்திற்கு அருகில் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து இந்த ரயில் தடம் புரண்டது. இவ்விபத்தில் 39 பேர் பலியாயினர்; 95 பேர் காயமடைந்தனர்.
இந்த ரயில் சென்ற பாதையில் மற்றொரு இடத்தில் வெடிக்காத குண்டு கண்டெடுக்கப் பட்டுள்ளது. எனவே, இந்த ரயில் தடம்புரண்டதற்கு பயங்கரவாதிகள் வைத்த வெடிகுண்டு தான் காரணம் என, ரஷ்ய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.இந்த குண்டு வெடிப்பு சதிக்கு காரணமான பயங்கரவாதியின் உருவத்தை, கம்ப்யூட்டர் மூலம் போலீசார் வரைந்துள்ளனர். இதையடுத்து, சந்தேகத் துக்குரிய பயங்கரவாதியை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment