
தமிழக போலீஸ் டாக்குமெண்டுரி படத்தில் இடம் பெறும் பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தமிழக போலீசின் 150 ஆண்டையொட்டி இந்த டாக்குமெண்டுரி படம் தயாராகிறது. போலீசார் ஆரம்ப காலத்தில் இருந்து இதுவரை பயன்படுத்திய சீருடைகள் சட்டம்-ஒழுங்கு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் போலீஸ் துறையில் உள்ள தற்போதைய தொழில் நுட்பவசதிகள் போன்ற அனைத்து அம்சங்களும் இந்த டாக்குமெண்ட்ரி படத்தில் இடம் பெறுகின்றன.
ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருது பெறும் முன் இதற்கு பின்னணி இசையமைக்கும்படி போலீசார் கேட்டுக்கொண் டனர். ஆனால் இப்போது அவர் பிசியாகி விட்டதால் அந்த பணியை செய்ய முடியவில்லை. ஆனால் நிறைய பேர் சேர்ந்து போலீசை பாராட்டி பாடும் ஒரு பாட்டுக்கு இசை கம்போசிங் செய்து தர ஒப்புக்கொண்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியதும், இந்த பாட்டுக்கான இசையை உருவாக்குகிறார்.
டாக்குமெண்ட்ரி படத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிடுகிறார்.
No comments:
Post a Comment