Pages

Saturday, November 28, 2009

சினிமா உலகத்தை மிரட்டும் மினி பட்ஜெட் படங்கள்

புதுமுகங்கள் நடிக்க, கிராமத்து பின்னணியில், `பொற்கொடி 10-ம் வகுப்பு' என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகி வருகிறது. அன்புக்காக ஏங்கும் உண்மையான உள்ளங்களின் உணர்வுகளை கதைக்களமாக கொண்ட படம் இது.

பிரவீன்-பிருந்தா அறிமுக ஜோடியுடன் பாலாசிங், ராஜஸ்ரீ, ஜெயசூரியகாந்த், புதுமுகம் அங்கமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீ முருகன் ஒளிப்பதிவு செய்ய, ஓவியன் இசையமைக்க, முத்து விஜயன், யுகபாரதி ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

நிï டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பில் எல்.இ.பிரபு தயாரிக்க, திரைக்கதை-வசனம்-டைரக்ஷன்: பழ.சுரேஷ். படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், ஆந்திர எல்லையான கனகம்மா சத்திரம், காவேரிராசபுரம், ஸ்ரீ ஹரிபுரம், சின்ன ஜம்பாட ஆகிய இடங்களில் நடைபெறு.

No comments:

Post a Comment