பிரிட்டன் இளவரசி டயானாவின் காதலராக இருந்த பாக்., இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஹஸ்னத் கான், கிரேக்க பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஹஸ்னத் கான்(51). தற்போது லண்டனில் வசித்து வரும் இவர், இரண்டு ஆண்டுகள், பிரிட்டன் இளவரசி டயானாவின் காதலராக இருந்தவர்.
ஹஸ்னத் கான் கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹடியா ஷெர் அலி (29) என்ற பெண்ணை திருமணம் செய்தார். அதன்பின், 18 மாதங்கள் கழித்து அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில், தற்போது அவர், கிரேக்க நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டரா பனாகுலஸ் என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.சுவீடன் நாட்டில் பிறந்த அலெக்சாண்டரா தன் 13 வயதில் பெற்றோருடன் சொந்த நாடான கிரீசிற்கு வந்தார். அதன் பின், 18 வயதில் மருத்துவம் படிப்பதற்காக, லண்டன் வந்தார்.ஹஸ்னத் கான் மற்றும் அலெக்சாண்டரா பனாகுலஸ் இருவரும் ஒரே மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த திருமணத்திற்கு அலெக்சாண்டரா பனாகுலசின் தாயும் ஒப்புதல் வழங்கி உள்ளார்.இதுகுறித்து அலெக்சாண்டராவின் தாய் அகாலியா கூறுகையில்,"ஹஸ்னத் கானை நான் பலமுறை சந்தித்து பேசி உள்ளேன். அவரது வயது வித்தியாசம் குறித்து கவலை இல்லை. பிள்ளைகள் அவர்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்கின்றனர். எல்லா அம்மாவையும் போன்று, என் மகளின் சந்தோஷத்தையே பார்க்க விரும்புகிறேன்.அவள் நல்ல பெண்; ஹஸ்னத் அவளுக்கு நல்லவராக இருப்பார். எனக்கு டயானாவை மிகவும் பிடிக்கும். அவர் மிக அழகாக இருப்பார்.என் மகள் மேக்-அப் போடும் விருப்பம் இல்லாவிட்டாலும், மிக அழகாகவே இருப்பாள். அதற்காக இருவரையும் ஒப்பிட விரும்பவில்லை.இவ்வாறு அகாலியா கூறினார்.
Saturday, November 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment