
பிரத்யேக ஏற்பாடு: பிரதிபா பட்டீல் சென்ற சுகோய்-30 எம்.கே.ஐ., ரக விமானம் இந்திய விமானப்படையில் உள்ள அதி நவீன போர் விமானங்களில்முக்கியமானது. மிக, மிக வேகமாக பறக்கக் கூடியது. ரஷ்ய தொழில் நுட்ப உதவியுடன் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போர் விமானம், உலகின் முன்னணி நாடுகளிடம் உள்ள போர் விமானங்களுக்கு இணையாக கருதப்படுகிறது. எனவே அதற்கு ஏற்ப பாதுகாப்பு கவச உடை அணிய வேண்டியது அவசியம் . சுகோய் போர் விமானத்தை ஓட்டும் பைலட்கள் ஜீ-சூட் வகை உடைகளை அணிவார்கள். இந்த உடை பைலட்களின் உடல் நிலையை சீராக வைத்திருக்கும். காற்ற ழுத்தம் காரணமாக மூளைக்கு அதிக ரத்தம் பாய்வதைத் தடுக்கும். ஜனாதிபதியும் இந்த உடையை அணிந்து கொண்டு தான் பயணித்தார். இந்நிலையில் இந்த பயணத்துக்காக கடந்த 3 மாதங்களாக ஜனாதிபதி பிரதிபா பட்டீலின் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டு வந்தது.
கலாம் வழியில் பிரதீபா : முப்படைகளின் தலைவர் என்ற முறையில் கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம் சுகோய் போர் விமானத்தில் சுமார் 30 நிமிடம் பறந்தார். போர் விமானத்தின் செயல்பாடுகளை கேட்டு அறிந்தார். அதே போல் தானும் சுகோய் போர் விமானத்தில் பறந்து பார்வையிட விரும்புவதாக ஜனாதிபதி பிரதிபா பட்டீல் தெரிவித்ததால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment