பாகிஸ்தானிலிருந்து திரும்பியுள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் கூறியதாவது:மும்பைத் தாக்குதல் நினைவு நாள் குறித்து அதிபர் ஒபாமா தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். பயங்கரவாதம் எந்த உருவில் இருந்தாலும் சரி, அதை ஏற்றுக் கொள்ள முடியாது. பயங்கரவாத ஒழிப்பில் எங்கள் நிலையை பாகிஸ்தானுக்குத் தெளிவாகக் கூறிவிட்டோம். தினமும் அதுபற்றி பாகிஸ்தானுடன் கலந்துரையாடுகிறோம்.அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஈடுபடுகின்றனர்; அதை நாங்கள் வரவேற்கிறோம். எங்கள் முயற்சிக்கு இடையூறாக பாகிஸ்தான், பயங்கரவாதிகளின் புகலிடமாக இப்போது இல்லை.
பாகிஸ்தான் தனது சுய விருப்பத்தின் பேரில் பயங்கரவாத ஒழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டால், உலகளாவிய நிலையில் அதற்கு வலிமையான ஆதரவு கிடைக்கும்; பொருளாதார உதவியும் கிடைக்கும். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தனது ஆதரவைத் தொடர்ந்து அளித்து வருகிறது.மும்பைத் தாக்குதல் தொடர்பான வழக்குகளில் பாகிஸ்தானின் போக்கு குறித்த இந்தியாவின் கவலையை அமெரிக்கா புரிந்து கொண்டிருக்கிறது.இவ்வாறு ஜேம்ஸ் ஜோன்ஸ் தெரிவித்தார்.
Thursday, November 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment