ஜான்சி ராணி தன் கணவர் மரணப்படுக்கையில் இருக்கும் போது டல்ஹவுசி பிரபுக்கு கடிதங்கள் எழுதினார். அந்த கடிதங்கள் தற்போது பிரிட்டன் நுலகத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரத்துக்கு முன்னர், உ.பி., மாநிலத்தில் உள்ள ஜான்சி பகுதியை ஆண்டு வந்தவர் ராணி லட்சுமி பாய். அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக டல்ஹவுசி பிரபு இருந்து வந்தார். லட்சிமி பாயின் கணவர் மரணப்படுக்கையில் இருந்தார். கணவர் தான் இறக்கும் போது இறுதி சடங்குகள் செய்ய வாரிசு ஒன்று வேண்டும் என்று தாமோதர் என்ற இளைஞரை வாரிசாக தத்தெடுத்தார். லட்சுமி பாய், தாமோதரை தனக்கு பின்னால் ஜான்சி அரசராக்க எண்ணினார்.
இது குறித்து, டல்ஹவுசி பிரபுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதை ஏற்க மறுத்த அவர், ஜான்சி சமஸ்தானத்தை ஆங்கில ஆட்சியின் கீழ் இணைக்கும் படி கட்டளையிட்டார். ஜான்சி ராணி அதை ஏற்க மறுத்து பிரிட்டீஷ் மீது போர் தொடுத்தார். போரின் போது, ஜான்சி ராணி கொல்லப்பட்டார். ஜான்சி ராணியின் கடிதங்கள் தற்போது லண்டன் நுலகத்தில் உள்ள ஆவண காப்பகத்தில் உள்ளது தெரிய வந்துள்ளது. பாரசீக மொழியில் எழுதப்பட்ட இந்த கடிதங்கள் மற்றும் பல ஆவணங்கள், போட்டோக்களை டல்ஹவுசியிடம் வேலை செய்த லிவின் பென்தம் சேகரித்து வைத்துள்ளார்.
Wednesday, November 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment