முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங் கோவனின் வீடு சென்னை அடையார் இந்திரா நகர் 10-வது குறுக்குத் தெருவில் உள்ளது. நேற்று முன்தினம் இளங்கோவன் குடும்பத்தினருடன் ஈரோட்டில் உள்ள வீட்டுக்கு சென்றார். சென்னை வீட்டில் காவலாளி மோசஸ் மட்டுமே இருந்தார்.
நேற்றிரவு 11.30 மணிக்கு காவலாளி மோசஸ் முன்பக்க கதவை பூட்டிவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவு 12 மணி அளவில் இளங்கோவன் வீட்டுக்கு 3 மர்ம மனிதர்கள் வந்தனர். அவர்கள் இளங்கோவன் வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார்கள்.
அது வீட்டு முன்பக்க அறை வாசலில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்தது. அங்கு போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் தீ பிடித்து எரிந்தன. ஆள் உயரத்துக்கு நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.
சத்தம் கேட்டு காவலாளி மோசஸ் எழுந்து ஓடிவந்தார். முன் பக்க கதவை திறந்து பார்த்தார். அப்போது மர்ம மனிதர்கள் மேலும் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
3 தடவை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் வாசல் அருகில் தீ பயங்கரமாக எரிந்தது. என்றாலும் அதிர்ஷ்டவசமாக தீ வேறு பகுதிக்கு பரவவில்லை. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
தீயை அணைக்க கூச்சலிட்ட காவலாளி மோசஸ் துணிச்சலாக தெரு பகுதிக்கு வந்து எட்டிப்பார்த்தார். ஆனால் அதற்குள் மர்ம மனிதர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
உடனடியாக இதுபற்றி ஈரோட்டில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு காவலாளி மோசஸ் தகவல் கொடுத்தார். பிறகு அடையார் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.
அடையார் போலீசார் விரைந்து சென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். பிறகு மர்ம நபர்கள் குறித்து 50-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க 2 தனிப்படை உருவாக்கப்பட்டது. அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இளங்கோவன் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியது டைரக்டர் சீமானின் ஆதரவாளர்கள் என்று தெரிய வந்தது. அவர்களை பிடிக்க இன்று அதிகாலை சென்னை முழுக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
போலீசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக 3 பேர் சிக்கினார்கள். அவர்கள் சீமானின் உதவியாளரும் டைரக்டருமான மித்ரன், அருண், மணி என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர். இவர்கள் மூவரும் டைரக்டர் சீமான் தொடங்கி உள்ள நாம் தமிழர் அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.
பிடிபட்ட 3 பேரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் வியஜகுமார் தலைமையில் வந்து நாங்கள் பெட்ரால் குண்டு வீசினோம் என்றனர். அதோடு பெட்ரோல் குண்டு தயாரிக்கவும் பயன்படுத்தவும் உதவி செய்தவர்கள் பற்றிய விபரங்களையும் போலீசாரிடம் கூறினார்கள்.
கைதான 3 பேர் மீதும் வெடி மருந்து சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சில பிரிவுகள் மிக கடுமையான பிரிவுகளாகும். கைதான 3 பேரும் ஒரு காரில் வந்ததாக கூறினார்கள்.
இதையடுத்து அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பெட்ரோல் வெடிகுண்டு வீச உதவி செய்த மற்றவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். எனவே இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்படு வார்கள் என்று தெரிகிறது.
காவலாளி மோசஸ் கூறியதாவது:-
இரவு 12 மணிக்கு டிரான்ஸ்பார்ம் வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. நான் விளக்கை போட்டு கதவை திறந்து பார்த்தால் தீ 3 அடி உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
வீட்டுக்கு வெளியில் நின்ற 3 பேர் மேலும் 2 தடவை பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். நான் ஓடி சென்று பார்ப்பதற்குள் அந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
இவ்வாறு காவலாளி மோசஸ் கூறினார்.
விடுதலைப்புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சிக்காக நேற்று ஈரோடு முழுவதும் தட்டி போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தன் ஆதரவாளர்களுடன் சென்று அந்த போர்டுகளை அகற்றினார். மாவீரர் தினம் கடைபிடிப்பதற்கும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் சென்னையில் உள்ளஅவர் வீடு மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.
இளங்கோவன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டை காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சுதர்சனம் எம்.எல்.ஏ. வசந்தகுமார் எம்.எல்.ஏ., ரங்கபாஷ்யம், கராத்தே தியாக ராஜன், போளூர் வரதன், மாவட்ட தலைவர் மங்கள் ராஜ், சிவராமன், மணி பால், கவுன்சிலர் வேலாயுதம், மற்றும் காங்கிர சார் இன்று காலை பார்வையிட்டனர். பிறகு தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
இளங்கோவன் வீட்டில் நேற்றிரவு சமூக விரோதிகள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கும் செயல் கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் ரீதியாக சந்திக்க இயலாதவர்கள் எங்கள் கட்சித் தலைவர்கள் மீது குறிவைத்துது தாக்குதல் நடத்துகிறார்கள்.
இதுதொடர்பாக நானும், சுதர்சனமும் இன்று காலை முதல்-அமைச்சர் கருணா நிதியை சந்தித்து பேசினோம். தாக்குதல் சம்பவம் பற்றி நேற்றிரவு தகவல் கிடைத்ததும் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
வன்முறை தலைவிரித்தாட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து தமிழ்நாட்டில் வன்முறையை வேரோடு அழிக்க நடவடிக்கை எடுக்கும். தீவிரவாதி களுக்கும், சமூக விரோதி களுக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லை.
இவ்வாறு தங்கபாலு கூறினார்.
இளங்கோவன் வீடு முன்பு திரண்டிருந்த தொண்டர்கள் ஆவேசத்துடன் காணப் பட்டனர். பிரபாகரனுடன் சேர்ந்து படம் எடுத்து கொண்டவர்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
பிறகு அடையார் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு சென்றனர். உருவ பொம்மை ஒன்றையும் தீவைத்து எரித்தனர். இதனால் அடையார் இந்திரா நகரில் இளங்கோவன் வீடு உள்ள பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் வீட்டை காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று காலை பார்வையிட்டனர். பிறகு தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
இளங்கோவன் வீட்டில் நேற்றிரவு சமூக விரோதிகள் சிலர் பெட்ரோல் குண்டு களை வீசி தாக்குதல் நடத்தி இருக்கும் செயல் கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் ரீதியாக சந்திக்க இயலாதவர்கள் எங்கள் கட்சித் தலைவர்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள்.
இதுதொடர்பாக நானும், சுதர்சனமும் இன்று காலை முதல்-அமைச்சர் கருணா நிதியை சந்தித்து பேசினோம். தாக்குதல் சம்பவம் பற்றி நேற்றிரவு தகவல் கிடைத்ததும் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. முழு விசாரணை நடத்தி உண்மையான குற்ற வாளிகளை கண்டு பிடிக்க அரசு உதவும் என்று நம்புகிறேன். முதல்- அமைச்சர் கருணா நிதியும் இதற்கு உறுதி அளித்துள்ளார்.
வன்முறையால் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த முடியாது. அரசியல் ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் சந்திக்க தயாராக உள்ளோம்.
வன்முறை தலைவிரித்தாட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து தமிழ்நாட்டில் வன்முறையை வேரோடு அழிக்க நட வடிக்கை எடுக்கும். இதில் காங்கிரஸ் கட்சியும், தோழமை கட்சிகளும் கடுமையாக இருக்கும
காங்கிரஸ் பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளது. தீவிரவாதி களுக்கும், சமூக விரோதிகளுக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லை.
இவ்வாறு தங்கபாலு கூறினார்.
Saturday, November 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment