Pages

Monday, November 30, 2009

கத்திப்பாரா பாலம் மீது போலீஸ் உதவியுடன் பட்டபகலில் இந்திரன் படபிடிப்பு . விமானத்தை தவற விட்ட பயணிகள் கதறல்.

போலீசுடன் ரஜினி மோதும் அதிரடி சண்டை காட்சிகள் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இன்று பட மாக்கப்பட்டது.

ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஞ்ஞானி, எந்திரன் என்ற இரண்டு கெட்-அப்களில் ரஜினி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளிலும், ஐதராபாத், கோவா, டெல்லி, மகாராஷ்டிரா உள்பட வெளிமாநிலங்களிலும் கடந்த ஒரு வருடமாக நடந்தது.

கடந்த சில மாதங்களாக சென்னை என்ஜினீயரிங் கல்லூரிகளில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது விஞ்ஞானியான ரஜினி, எந்திரன் ரஜினியை உருவாக்குவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டன.

பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகள், எரியும் காருக்குள் இருந்து ரஜினி தப்புவது, பங்களா வீடு கொழுந்து விட்டு எரிவது போன்ற காட்சிகள் அரங்குகள் அமைத்து எடுக்கப்பட்டன.

படப்பிடிப்புகள் முடிவடைந்து வருகிற மார்ச் மாதம் படம் ரிலீசாக உள்ளது. டப்பிங் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ரஜினி முதல் கட்ட டப்பிங் பேசி முடித்துவிட்டார்.

இதற்கிடையில் எந்திரன் படத்தில் மேலும் சில காட்சிகளை சேர்க்க திட்டமிட்டனர். இதற்காக புதிய காட்சிகள் ஷ§ட்டிங் நடந்து வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள பிரமாண்டமான மேம்பாலத்தில் இன்று காலையில் ஷ§ட்டிங் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு படப்பிடிப்பு குழுவினர் வந்தனர். அடுக்கு மேம் பாலத்தின் மேல் தள ரோட்டில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஒரு காரில் வித்தியாசமான கெட்-அப்பில் ரஜினி, மணப் பெண்ணை அழைத்து செல்வது போலவும், அந்த காரை போலீசார் துரத்தி செல்வது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டது.

அந்த காரை போலீசார் மடக்குகிறார்கள். உடனே அவர்களுடன் ரஜினி மோதுகிறார். கையில் துப்பாக்கியுடன் ரஜினி மோதும் அதிரடி சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டது.

ரஜினி வந்ததை அறிந்ததும் அதிகாலையிலேயே ஏராளமானவர்கள் அந்த பகுதியில் கூடினார்கள். ஆனால் ஷ§ட்டிங் நடைபெற்ற வட பழனி- தாம்பரம் மெயின் ரோட்டில் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

பஸ்கள் மற்றும் வாகனங்களை பாலத்தின் கீழ் வழியாக திருப்பி விட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்துக்குள் விமான நிலையம் செல்ல முடியாமல் சிலர் விமானங்களை தவற விட்டு தவித்தனர்.

பகல் 12 மணி வரை படப்பிடிப்பு நடந்தது. காலை 8 மணிக்கு மேக்கப்புடன் ரஜினி காரில் வந்தார். காட்சிகள் முடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

3 comments:

  1. இதை விட ஒரு கொடுமை இருக்க முடியாது . பல கோடி ரூபாய்களை இறைத்து படத்தை எடுக்கும் தயாரிப்பாளருக்கு அடிப்படை அறிவு கூட இருக்காதா ? வடபழனி தாம்பரம் வழியும் மூடப்பட்டதாம்.மனிதாபம் அற்ற பாவிகள். செட் போட்டு எடுக்க வேண்டியது தானே ? ரஜினிக்கும் ஷங்கருக்கும் கொம்பா முளைத்திருகிறது ? பொது மக்கள் முக்கியமா . இல்லை சினிமா காரர்கள் முக்கியமா ?

    மீரா நாயர் .

    ReplyDelete
  2. பொது மக்கள் இடையூறு இல்லாமல் எதாவது செய்து விட்டு போக வேண்டியதுதானே ? எந்த அதிகாரிகள் யாருடைய வற்புறுத்தலின் பெயரில் அனுமதியை அதுவும் பீக் டிராபிக் நேரத்தில் வழங்கினார்கள் .திருந்தாத கன்மங்கள் இருந்தென்ன லாபம் என்கிற எம் . ஜி . ஆர் . பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது .

    தமிழ் நிலவன் , சென்னை .

    ReplyDelete
  3. இது போன்று படபிடிபுக்களுக்கு தடை வழங்க வேண்டும். ஆளும் கட்சி ஆதரவு இல்லாமல் அனுமதி வழங்க பட்டிருக்குமா ? Insult to Tamilnadu Government.

    என்சி தகடோ , ஜப்பான் .

    ReplyDelete