ஆனால் நடிக்க மறுக்கிறார். தெலுங்கு படங்களுக்கு மட்டும் கால்ஷீட் கொடுக்கிறார். இதற்கிடையில் நயன்தாராவை நிரந்தரமாக இந்தியில் நடிக்க வைக்க பிரபுதேவா திட்டமிட்டுள்ளார். மும்பையில் குடி வைக்கவும் முடிவு செய்துள்ளார். அங்கு வீடு தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
சல்மான்கானை வைத்து “மோஸ்ட் வான்டட்” படத்தை பிரபுதேவா இயக்க உள்ளார். அதில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க தயாரிப்பாளரிடம் சிபாரிசு செய்கிறாராம். அந்த படம் மூலம் இந்திப் பட உலகில் நயன்தாராவை பிரபலப்படுத்த முடியும் என்று நம்புகிறார்.
இதற்கிடையில் அடுத்த மாதம் இறுதியில் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்திருப்பதாக தகவல் பரவி உள்ளது. மனைவி ரம்லத்தை சமரசப்படுத்தி வருகிறார். ஆனால் இதுவரை அவரிடம் சம்மதம் கிடைக்கவில்லை. ரம்லத் எதிர்த்தாலும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக உள்ளனர்.


No comments:
Post a Comment