Pages

Tuesday, November 24, 2009

அருந்ததி மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் வலசை ரவிச்சந்திரன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

3 சதவீதம் தனி உள் இடஒதுக்கீடு வழங்கி இந்த ஆண்டு 56 மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளிலும், 1165 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளிலும் கல்வி பயில வாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்து உயர்கல்வி வளர்ச்சிக்காக நன்கொடையாக ரூ.61 லட்சத்து 5 ஆயிரம் வழங்கிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி பாராட்டு விழாவை டிசம்பர் 5-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அருந்ததி மக்கள் கட்சி சார்பில் அருந்ததியர் மக்கள் ஒன்றுகூடி நடத்துகிறோம்.


நன்றி பாராட்டு விழாவிற்கு நான் வரவேற்புரையாற்றுகிறேன். துணை சபாநாயகர் துரைசாமி தலைமை தாங்குகிறார். எம்.முத்துசாமி, இஸ்ரேல், ஏ.முனியன் முன்னிலை வகிக்கின்றனர்.

அமைச்சர் தமிழரசி, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், பெருமாள்ராஜ், மணிவண்ணன், குருசாமி பங்கேற்கிறார்கள். முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்புரையாற்றுகிறார்.

திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் தி.மு.க. வுக்கு எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம். தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்காக அருந்ததி மக்கள் கட்சி தொண்டர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment