சிங்கப்பூர் ஆற்றில் படகு மூலம் சென்ற துணை முதல்வர் ஸ்டாலின், ஆற்றுப் பணிகளை பார்வையிட்டார்.சிங்கப்பூர் சென்றிருந்த துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள், அங்குள்ள ஆற்றை சுத்தப்படுத்தும் விதம் குறித்து, சிங்கப்பூர் அரசின் "பப்ளிக் யுடிலிட்டி' வாரிய உயரதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 1977ம் ஆண்டுக்கு முன், முற்றிலும் மாசுபட்டிருந்த சிங்கப்பூர் ஆற்றை, 10 ஆண்டுகளில், மேம்படுத்திய நடவடிக்கைகள் குறித்து, துணை முதல்வரிடம் விளக்கினர்.
இந்த சுத்தப்படுத்தும் பணிகள் முடிந்த பின், ஆற்றின் ஓரம் உள்ள பகுதிகளில் வணிக ரீதியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும், அழகூட்ட தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும், சிங்கப்பூர் அதிகாரிகள் விளக்கினர்.இதன்பின், துணை முதல்வர் ஸ்டாலினும், அதிகாரிகள் குழுவினரும், சிங்கப்பூர் ஆற்றில், கடல் நீர் புகாமல் இருக்க கட்டப்பட்டுள்ள தடுப்பணை யை பார்வையிட்டனர். படகு மூலம் 3 கி.மீ., தூரம் வரை சென்று, ஆற்றின் ஓரப்பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பணிகளை, துணை முதல்வர் கண்டறிந்தார்.
Thursday, November 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment