Monday, November 30, 2009
ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.பாத்திமா ரபீக் இசையமைப்பாளர் அவதாரம் ?
கலைஞர் டி.வி.,யில் டிசம்பர் 5ம்தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகவுள்ள நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.பாத்திமா ரபீக் இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கிறார். தமிழகத்தின் கனவு தொழிற்சாலையான கோடம்பாக்கத்தில் கற்பனைகளுடன் சென்னைக்கு வந்து போராடும் இளைஞர் கூட்டத்தை - வருங்கால இயக்குனர்களின் தாகத்தை ஊடகப்படுத்தும் புது தளமாக இந்த நிகழ்ச்சி அமையவிருக்கிறது. தொலைக்காட்சி வரலாற்றில் புதிய அம்சமாக உருவாகும் இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர்கள், பயிற்சி இயக்குனர்கள், இணை - துணை இயக்குனர்கள் இளம் இயக்குனர்கள் மற்றும் இயக்குனர் துறையில் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்கள், இசையமைப்பாளர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். ஜெ.வி.மீடியா ட்ரீம்ஸ் தயாரிக்கும் இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் மதன், நடிகர் பிரதாப் போத்தன் ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். சிறப்பு விருந்தினர்களாக முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் இடையிடையே பகிர்ந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சிறந்த குறும்படங்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி பாத்திமா ரபீக் இளம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகவிருக்கிறார். நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சிக்காகவே அவர் பிரத்யேக பாடலை எழுதி, இசையமைத்து அசத்தியிருக்கிறாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment