Pages

Friday, November 27, 2009

இந்த ஆண்டு 9.27 கோடி சபரி மலையில் இது வரை வருமானம் ?

கேரளாவின் பிரசித்தி பெற்ற புண்ணியஸ்தலமாக விளங்கும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 16-ந்தேதி மண்டல பூஜை விழாவுக்காக நடை திறக்க பட்டது. அன்றுமுதல் இன்றுவரை சபரிமலை நோக்கி விரதம் இருந்து இருமுடி சுமந்து வரும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த ஆண்டைபோல இல்லாமல் இந்த ஆண்டு மண்டல பூஜை தொடங்கிய நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் வழக்கத்தை விட அப்பம், அரவணை மற்றும் சபரிமலை பிரசாதங்கள் விற்பனையும், காணிக்கை வசூலும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் சபரிமலை வருமானம் ரூ.7.2 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 9.27 கோடி கிடைத்துள்ளது.


கடந்த ஆண்டு சபரிமலையில் அரவணை விற்பனை ரூ.3.64 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 4.05 கோடிக்கு விற்பனையானது. ரூ.75 லட்சத்துக்கு அப்பம் விற்பனை நடந்துள்ளது. பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகமாக காணப் படுவதால் அப்பம்,அரவணை வினியோகிக்க கூடுதலாக விற்பனை மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக தேவசம்போர்டு சபரிமலை செயல்அலுவலர் ஜெயக்குமார் கூறியிருப் பதாவது:-

அப்பம்,அரவணை வாங்குவதற்கான கூப்பன்கள் தனலட்சுமி வங்கியின் 211 கிளைகள் மூலம் நாடு முழுவதும் வினியோகம்செய்யபட்டு வருகிறது. சன்னிதானத்தில் 24 பிரசாத வினியோக கவுண்டர்கள் 24 மணிநேரமும் செயல்படும். இதில் 90 நிரந்தர ஊழியர்களும், 150 தற்காலிக பணியாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

மண்டல பூஜை தொடங்கிய நாளில் இருந்து இதுவரை சபரிமலையின் வருமானம் ரூ.9 1/2 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கூட்ட நெரிசலை சமாளிக்க சபரிமலையில் 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment